Curry leaves benefits: இந்தியாவின் குறிப்பாக தென் இந்திய சமையல் அறையில் கட்டாயம், இடம்பெற்றிருக்கும் பொருட்களில் ஒன்றாக கருவேப்பிலை உள்ளது. உணவின் சுவை, மணத்தை அதிகரித்து காட்டும் கருவேப்பிலை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
ஒவ்வொரு நாளையும் காலையில், 5 அல்லது 6 கருவேப்பிலையுடன் தொடங்கிப் பாருங்கள். அதன் நன்மை என்னவென்று உங்களுக்கு அனுபவ ரீதியாக புரியும். கருவேப்பிலையில் இருக்கும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நன்மை பல்வேறு நோயிலிருந்து பாதுகாக்கிறது. இதன் மகத்தான 10 நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க கருவேப்பிலை சிறந்தது.
நீரிழிவு நோய்க்கு எதிரான மருந்து:
நீரழிவு நோயாளிகள் கருவேப்பிலை சாப்பிடுவது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இதில் நிறைந்துள்ள தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவை உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஆக்ஸிஜனேற்றிகள்:
கருவேப்பிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நமது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி குடலை சுத்தமாக வைக்க உதவுகிறது.
செரிமானத்திற்கு நல்லது:
செரிமானம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு கருவேப்பிலை நல்லது. பல்வேறு மூலிகை மருத்துவ குணம் நிறைந்த கருவேப்பில்லை எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது:
கருவேப்பிலை உடல் எடையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பற்களுக்கு நல்லது:
தினமும் 2-3 கருவேப்பிலை இலைகளை மென்று சாப்பிடுவது, நமது ஈறுகள் மற்றும் பற்களில் பாக்டீரியாக்கள் வராமல் தடுக்கிறது.
கண்களுக்கு நல்லது:
கருவேப்பிலை கண் பார்வைக்கு நல்லது. வைட்டமின் ஏ வை அதிகளவில் கொண்டுள்ள இது கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
காயங்களை குணமாக்கும்:
கறிவேப்பிலை, மஞ்சள், தயிர் ஆகியவற்றை பேஸ்ட் செய்து, தீக்காயங்கள், கொப்புளங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். மேலும், இது உடலில் தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவுகின்றது.
இரத்த சோகையைத் தடுக்கிறது:
கருவேப்பிலையில் நிறைந்துள்ள இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம், உடலின் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
.கர்ப்பிணிகளுக்கு நல்லது:
கருவேப்பிலை கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது
கருவேப்பிலையின் மூலிகை நிறைந்த நறுமணம் மற்றும் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உடலை, சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
கல்லீரலுக்கு நல்லது:
கருவேப்பிலையில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும், கருவேப்பிலை சாப்பிடுவது வயிற்று போக்கு மற்றும் மூல நோய் சிகிசைக்கு நல்லது.
முடி வளர்ச்சிக்கு நல்லது:
கருவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலை இலைகளை கலந்து தடவவும். இது முடியின் வேர்களை வலுப்படுத்தி முடிக்கு ஊட்டமளிக்கும்.