
இன்றைய பெரும்பாலான தம்பதிகளின் வாழ்வில் முக்கிய பிரச்சனையாக இருப்பது, பாலியல் உறவில் திருப்தி இல்லாமல் இருப்பது. இதனால், கணவன் -மனைவி உறவில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, இதுபோன்ற நேரத்தில் வேறொருவரின் அரவணைப்பு தேவைப்படுவதால், சில நேரம் அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்கிறது. எனவே, கணவன் -மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க, இருவரின் உறவில் மசாலா சேர்க்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே, உறவில் உங்கள் துணையை முழு திருப்திபடுத்தி, உச்சகட்ட நிலையை அடைய வைக்க வேண்டும். அப்படி, உறவில் இருவரும் மகிழ்ச்சியான இன்பத்தை பெறுவதற்கு பாலியல் வாழ்வில் சேர்க்க வேண்டிய மசாலா பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

கண் பார்த்து பேசுவது:
உடலுறவு துவங்கும் முன் இருவரும் கண் பார்த்து பேசிக் கொள்வது, ஆண் -பெண் ஆகிய இருவருக்கும் சிற்றின்ப அனுபவத்தை தூண்டிவிடும். இது உங்களின் காதல் ஆசை துளிர்விடும். இதனால் தம்பதிகள் இருவரும் உச்சகட்டத்தை அடைவது மிகவும் சுலபமாக இருக்கும்.
இடத்தை மாற்றலாம்:

சில நேரம் படுக்கை அறையில் உடலுறவில் ஈடுபடுவது மிகவும் சலிப்பானதாக இருக்கலாம். உடலுறவு படுக்கை அறையில், மட்டுமின்றி சமையல் அறை, கழிவறை போன்ற அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளலாம். இது உங்கள் இருவருக்கும் வித்தியாசமான அனுபவத்தை தரும். இதன் மூலம், நீங்கள் உச்சக்கட்டம் அடைவது மிகவும் சுலபமாக இருக்கும்.
கண்ணை மூடிக்கொண்டு செல்லுங்கள்:

கண்ணை கட்டிக் கொண்டு உடலுறவு கொள்வது. உங்கள் துணையின் அடுத்த நகர்வு, என்ன என்பதை தெரிந்து கொள்வதில் பதற்றமும், சிலிர்ப்பும் அதிகமாக இருக்கும். இது உங்கள் இருவருக்கும் உச்சகட்டத்தை அதிகரிக்கும். இதன் மூலம், சிறப்பான அனுபவத்தை நீங்கள் பெறலாம்.
உறவில் முனங்கல் இருக்க வேண்டும்:
ஆண்- பெண் ஆகிய இருவரும் உடலுறவு கொள்ளும் போது முனங்குவது உறவில் இருவரையும் நன்றாக செயல்பட வைக்கும். இது உங்கள் செயல்திறனை அதிகரித்து, உச்சகட்ட இன்பத்தை தரும். இதனால் ஆண் -பெண் ஆகிய இருவரும் உறவில் உற்சாகமாக இருக்கலாம்.
மேலும் படிக்க…சுய இன்பம் நல்லதா ..? கெட்டதா..? மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம்..!

உடலுறவு கொள்ளும் போது, சில சில்மிஷம் செய்யுங்கள்:
தம்பதிகள் இருவரும் உடலுறவு கொள்ளும் போது, உச்சகட்டத்தை அடைய ஒருவருக்கு ஒருவர் தொடுதல், தீண்டுதல், கட்டி பிடித்தல், அணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்ற பல்வேறு சில்மிஷ வேலையை செய்யுங்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது, நீங்கள் உச்சகட்ட அனுபவத்தை எளிதில் பெறலாம்.
பகலில் உடலுறவு:

உடலுறவு என்பது இரவில் வைத்துக் கொள்வது தான் இன்பமானது என்று பலரும் நினைக்கிறார்கள். இன்றைய காலத்தில் வேலைக்கு சென்றுவிட்டு களைத்து போய் வரும் தம்பதியினர், இரவில் உறவு கொள்வதை விரும்புவதில்லை. அதற்கு பதிலாக காலை அல்லது மதிய நேரத்தில் உறவு கொள்வதை விரும்புவதாக ஆய்வுகள் விளக்குகின்றது.
பொசிஷன்களில் மாற்றம்:
ஒரே விதமான பொசிஷன்களை ட்ரை செய்து பார்ப்பதை காட்டிலும், வித்தியாசமான பொசிஷன்களில் முயற்சி செய்து பார்க்கலாம். ஏனெனில், ஒரே பொசிஷனை முயற்சி செய்து பார்ப்பது உங்கள் துணைக்கு சலிப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க…சுய இன்பம் நல்லதா ..? கெட்டதா..? மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம்..!