Sharing is caring!

Chandra Grahan 2023: இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ம் தேதி மாலை 8.45 மணி முதல் இரவு 1 மணி வரை நடைபெற உள்ளது. சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் அல்லது சூரிய கிரகணம் நிகழ்கிறது. பொதுவான சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் பார்வையில், இரண்டுமே அசுபமாக பார்க்கப்படுகிறது.

இந்த கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. ஆனால் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த வானியல் நிகழ்வைக் காண முடியும். இதையடுத்து, இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வரும் அக்டோபர் 28ஆம் தேதி நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை:

சந்திர கிரகணம் நிகழும் போது கர்ப்பிணிகள், இந்த நேரத்தில் உணவு எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அதேபோன்று, இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதால், குழந்தை குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

கிரகணம் முடிந்த பிறகு, குளித்துவிட்டு உணவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஜோதிடம் கூறுகிறது.

கர்ப்பிணி பெண்கள், இந்த நேரத்தில் வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகணம் நிகழும் நேரத்தில் ஆலய தரிசனம் செய்ய வேண்டாம்.

கிரகணத்திற்கு பிறகு, கங்கை நீரை எடுத்து வீட்டின் மூலை, முடுக்குகளில் தெளித்து விட வேண்டும்.

வீட்டில் இருக்கும் உணவில் துளசி இலைகளை போட்டு வைக்க வேண்டும். இருப்பினும், இவை எதற்கும் அறிவியல் ரீதியாக காரணங்கள் கிடையாது.

(Visited 111 times, 1 visits today)

Sharing is caring!