Flax seeds for weight loss: ஆளிவிதை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறது. இதில், நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 மற்றும் துத்தநாகம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஆளிவிதைகளை அப்படியே பச்சையாக சாப்பிடுவதை காட்டிலும், வறுத்து சாப்பிடுவதால் கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. எனவே, ஆளிவிதையை சரியான முறையில் எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்துவைத்துக் கொள்வோம்.
எடை இழப்புக்கு மிகவும் நல்லது:
ஆளிவிதையை 1 டீஸ்பூன் எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், எடை இழப்புக்கு மிகவும் நல்லது.
ஆளிவிதை உலர் பழங்களில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவை உடையது. ஆளி விதையில் இருக்கும் புரதம் மற்றும் நார்சத்து உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் நீண்ட நேரம் நமக்கு பசியின்மை இருக்காது.
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, முடி உதிர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளிவிதை சிறந்த பலனளிக்கும்.
வறுத்த ஆளிவிதைகளை எடுத்து ரவை மற்றும் கேரட்டில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்மை பயக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனை தீரும்:
ஆளிவிதையை சாலட் வடிவில் சேர்த்து வைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்த்து செரிமான அமைப்பு சீராகும். இதன் சுவை பலமடங்கு இருக்கும். இதனை வறுத்த பின் சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.
ஆளிவிதை உட்கொள்வது புற்றுநோய் போன்ற நோய்களுக்கு நன்மை பயக்கும்.
சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகும்:
சரும பிரச்சனை இருப்பவர்கள் ஆளி விதையின் எண்ணெய் பயன்படுத்தலாம். மேலும், மூட்டுவலி தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்த பலனளிக்கும்.
ஆளிவிதை ரத்த குழாய்களை சுத்தம் செய்து, உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. மேலும், சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை நம்மை பாதுகாக்கிறது.