Sharing is caring!

Relationship tips: உடலுறவு மேற்கொள்வது ஆண், பெண் ஆகிய இருவருக்கும் சிற்றின்பத்தை தருவதாகும். பாலியல் உறவில் பல்வேறு நிலைகள் உள்ளது. அதில், உச்சக்கட்டத்தை அடைய செய்வது மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். செக்ஸ் விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள பலருக்கும் தயக்கம் இருக்கும். இன்னும், சிலர் மறைமுகமாக தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். நாம் சாப்பிடுவது, தூங்குவது போன்ற செக்ஸ் செயல்பாடுகளும் ஆரோக்கியமான ஒன்றுதான். எனவே, இவற்றை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதில் உங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் வேண்டாம்.

நீங்கள் பாலியல் உறவில் உச்சக்கட்டத்தை அடையும் நிலையில், உங்களின் இதய துடிப்பு அதிகரித்து, பிறப்புறுப்புக்குள் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, உடல் முழுவதும் ஒருவிதமான சிலிர்ப்பை ஏற்படுத்தும். உங்களின் உற்சாகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். எனவே, இதுபோன்ற உச்சக்கட்ட நிலையினை அடைவதற்கு பெண்கள் தங்களை எப்படி தயார் நிலையில், வைத்துக் கொள்வது என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

வெளிப்படை தன்மை அவசியம்:

பெண்கள் பெரும்பாலும் தங்களின் பாலியல் ஆசைகளை மனதில் வைத்து மறைத்துக் கொள்கிறார்கள்.
அதற்கு பதிலாக தங்களின் போலியான உச்சகட்ட நிலையினை துணையிடம் வெளிப்படுத்துகிறார்கள். எனவே, வெளிப்படை தன்மையுடன் பெண்கள் தங்களின் பாலியல் விருப்பங்களை துணையிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் உச்சக்கட்ட நிலையினை அடைய முடியும்.

இடங்களில் மாற்றம் அவசியம்:

நீங்கள் எப்போதும் வழக்கமாக உடலுறவு கொள்ளும், இடத்தை தவிர்த்து மேஜை, பாத்ரூம், பால்கனி, கார் போன்ற புதிய இடங்களில் முயற்சி செய்து பார்க்க வேண்டும். இதன் மூலம் இருவரும் உச்சக்கட்டத்தை எளிதில் அடையலாம். மகிழ்ச்சியான பாலியல் வாழ்கை வாழலாம்.

முத்தம் கொடுப்பது:

பாலியல் ஆசையை அதிகரிக்கும் ரகசியமான இடத்தில் முத்தம் கொடுப்பது, உங்கள் இருவரின் வாழ்க்கையையும் சிறப்பாக மாற்றும். இவை இருவருக்கும் உற்சாகத்தை தருவதுடன், இருவரின் இல்லற நெருக்கத்தையும் அதிகரிக்கும்.

கிசு கிசு பேசுவது:

ஆண்களை போலவே பெண்களும் பாலியல் உறவில் அதிக செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும். பாலியல் பொம்மைகளை போல், பெண்கள் அமைதியாக இருக்கக் கூடாது. அதேபோல், இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு ஜாலியாக பேசிக் கொள்ள வேண்டும். இவை பாலியல் உறவை மேலும் வலுப்படுத்தும்.

உறவில் முழு ஆர்வம் வேண்டும்:

ஆண், பெண் ஆகிய இருவரும் உறவில் முழு மனதுடன், முழு ஆர்வத்துடன் இருக்க வேண்டும். ஒருவேளை, இருவரில் ஒருவருக்கு சலிப்பான இருந்தாலும், உறவில் சிக்கல் ஏற்படும். தங்களுக்கு எந்த நிலை சரியாக இருக்கும் என்பதை வெளிப்படுத்த வேண்டும். மேலும், செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது, வலி ஏற்படாமல் இருக்க உங்கள் சருமத்திற்கு ஏற்ற லூப்ரிகண்ட்டை பயன்படுத்தலாம்.

(Visited 149 times, 1 visits today)

Sharing is caring!