Sharing is caring!

Sani Peyarchi 2023: நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு வருவதற்கு இரண்டரை ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும் சனி பகவான், அதே இடத்திற்கு அடுத்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் தான் வருவார். இதையடுத்து, அவர் அடுத்த ஆண்டு மார்ச் 29ம் தேதி அவர், கும்பத்தில் இருந்து விலகி மீன ராசிக்குள் நுழைகிறார். 2027 ஜூன் 2 ஆம் தேதி வரை அவர் மீனத்தில் பயணம் செய்வார். இதன் காரணமாக சிம்மம், துலாம், மகரம், ஆகிய ராசிகளுக்கு சிறப்பான யோகம் கிடைக்கப்போகிறது. இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

Pariharam to get Money: கண் திருஷ்டி கழிந்து, கடன் தொல்லையில் இருந்து விடுபட… இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்..!

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். உடல், ஆரோக்கியமாக இருக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு, வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். தொழிலில் உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற, பலன் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வாழ்வில் திடீர் முன்னேற்றம் இருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்:

மகரம் ராசிக்காரர்களின் வாழ்க்கை, சனி பகவானின் அருளால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் லாபம் கூடும். திருமணத்திற்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, சனியின் நட்சத்திர பெயர்ச்சி இரட்டிப்பு பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாள் முயற்சி வெற்றியை தரும். போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். திடீர் பண வரவு உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் உண்டாகும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வரும். தொழில் வளர்ச்சி பெறும்.

மேலும் படிக்க…Sani Peyarchi 2023: தீபாவளிக்கு முன் சனியின் வக்ர பெயர்ச்சி…இந்த 4 ராசிகளின் வாழ்கை தலைகீழாக மாறும்..!

(Visited 45 times, 1 visits today)

Sharing is caring!