
கொய்யாப்பழத்தில் இருக்கும் கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஏழைகளின் ஆப்பிள் கொய்யாப்பழம். விலை மலிவானது, அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியது. கொய்யா இலைகளை கஷாயம் வைத்து குடிப்பது மலச்சிக்கலைபோக்கும், வாந்தியை தடுக்கும். மேலும், கொய்யா இலைகளின் பட்டை ஈறுகளுக்கு வலிமை தரும். மேலும், இதில் நிறைந்துள்ள நார்சத்துக்கள் குழந்தைகளின் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

எப்போது சாப்பிடுவது நல்லது:
கொய்யா பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. ஆம், ஒரு நாளைக்கு ஒரு கொய்யா பழம் சாப்பிடலாம். உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் கொய்யா எடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் மாலை அல்லது இரவு நேரத்தில் கொய்யா பழத்தை சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானம் சரியாக நடக்காது. மேலும் இது சளி மற்றும் இருமலுக்கு வழி வகுக்கும்.

கொய்யா பழத்தை பகல் மற்றும் மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும். மதிய உணவு நேரத்தில் ஒன்றறை மணி நேரம் கழித்து கொய்யப்பழத்தை சாப்பிடுவதால் அனைத்து விதமான வயிற்று பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். கொய்யா இலை சாறின் ஊட்டச்சத்துக்கள் மருந்துக்கடைகளில் மாத்திரைகளாக கிடைக்கிறது. இருப்பினும், இவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
கொய்யா பழத்தின் நன்மைகள்:
கொய்யாப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது, உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மேலும், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளிலிருந்து நன்மை பாதுகாக்கும்.

கொய்யாப் பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது.
கொய்யா பழம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்துகிறது.
கொய்யாவில் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பினை சீராக பராமரிக்க உதவுகிறது.கொய்யாவில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது உங்களின் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், பசியை தூண்டும் தன்மை கொண்டது.