இன்றைய காலத்தில் குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு மற்றும் மித மிஞ்சிய டெக்னாலஜி உபயோகம் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், நம்முடைய வீடுகளில், குழந்தைகள் அதிகம் டிவி பார்க்கக் கூடாது, செல்போன் பயன்படுத்துதல் கூடாது என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஆனால், நிஜமாகவே குழந்தைகள் டிவி பார்ப்பதால் எளிதில் பல்வேறு விஷயங்கள் கற்றுக் கொள்கின்றனர். அது என்னென்ன திறமைகள் என்பதைப்பற்றித் தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப் போகிறோம்.
அதிக திறமைகளை வளர்த்துக் கொள்வது:
குழந்தைகள் பொதுவாக டிவி பார்க்கும் போது எளிதில் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக, அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகள், வரலாற்று நிகழ்ச்சிகள், ஆங்கிலம் எளிதில் கற்றுக் கொள்ளும் கார்டூன்கள், ஆரோக்கியம், ஊட்டச்சத்து சார்ந்த விஷயங்கள் மிகவும் எளிய முறையில் கற்றுக் கொள்கின்றனர். குழந்தைகள் புத்தகங்களில் படித்து தெரிந்து கொள்வதை காட்டிலும், இது போன்ற எளிமையான முறையில் தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர். அவை எந்தெந்த வழிமுறைகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
தொழில் நுட்ப வளர்ச்சி:
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி காலத்தில், பல்வேறு தொழில் நுட்பம் சார்ந்த அறிவினை வளர்த்துக் கொள்வது அவசியம். இதனால், செல்போன், கம்பியூட்டர்கள், ஐபேட் போன்றவை உபயோகம் தங்கள் அறிவினை எளிதில் வளர்த்துக் கொள்ள உதவி செய்கிறது.
உலக செய்திகளை பற்றிய அறிந்து கொள்ள முடியும்:
குழந்தைகள் உலக அளவில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றி எளிதில் அறிந்து வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், உலக அளவில் ஓ.டி.டி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், வெப் சீரியல்கள் அந்த நாட்டின் நடைமுறைகள், கலாச்சாரம் போன்றவற்றை நம்முடைய கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது.
சமூக பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது:
தங்களின் இளம் வயதிலேயே சமூக பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது அவசியம். டிவி மூலம் பல்வேறு கலாச்சாரம் சார்ந்த நடைமுறைகளை, சமூக பொறுப்புகளை எளிதில் அறிந்து கொள்ள உதவுகிறது.
குடும்பத்தின் பிணைப்பை உறுதியாக்கும்:
இன்றைய பிஸியான காலகட்டத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது, தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே, விடுமுறை நாட்களின் குழந்தைகளுடன் பெற்றோர்கள், ஒன்றாக சேர்ந்து படம் பார்ப்பது குடும்பத்தில், ஒற்றுமையை ஏற்படுத்தும். இருப்பினும் ”அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை உணர்த்து ஒவ்வொருவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.