நீதியின் கடவுளான சனி பகவான் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நம்மை மற்றும் தீமைகளை தருகிறார். சனி பகவான் ஒருவருக்கு நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். கடந்த ஜூன் மாதம் வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் தற்போது வரை அதே நிலையில் தொடர்கிறார். அவரது இந்த நிலை ராசிகள் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குகிறது. அதன்படி, குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பமாகிறது. அதன்படி, ரிஷபம், கும்பம், உள்ளிட்ட குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு அடுத்த 4 மாதங்கள் பொற்காலம் துவங்கவுள்ளது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ரிஷபம்:
சனியின் அருளால் நேரடி பண பலனங்கள் உண்டாகும். குடும்ப உறவில் மகிழ்ச்சி ஏற்படும். முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரம் ஆகும். இந்த காலத்தில் சிக்கிய பணம் கைக்கு வரும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
கும்பம்:
சனி உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்ட வீட்டில் இருப்பார். இந்த நேரத்தில் சனி தனது புகழ் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த நேரம் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும். இந்த நேரத்தில் உங்கள் சிக்கிய பணம் கைக்கு வரும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.
சிம்மம்:
சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரம் சிறப்பான பலன்கள் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு,வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். சொத்து விஷயத்தில் லாபம் கிடைக்கும். திடீர் பணம் கைக்கு வரும். தொழிலில் லாபம் உண்டாகும். குழந்தை ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.