Mobile phone using health problems: இன்றைய நவீன காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாத மனிதர்கள் குறைவு, அந்த அளவிற்கு செல்போன், மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. இருப்பினும், ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை மனதில் கொண்டு செல்போன் உபயோகம் செய்வது நல்லது. அளவாக பேசுவதற்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் எந்த விதமான தவறும் இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல் தேவைற்ற செயல்களில் செல்போன்களைப் அதிகப்படியாக பயன்படுத்துவது சில விசித்திரமான உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.
செல்போன் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது, அதில் இருந்து வரும் ரேடியேஷன் நம்முடைய உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, செல்போன் ரேடியேஷன் மூளை, காது, இதயம் போன்றவற்றை பாதிக்கும். நோமோபோபியா என்னும் மனநோயை உண்டாகும். இன்றைய காலத்தில், பெரியவர்களை விட , குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக நேரம் செல்போன் பார்க்கிறார்கள்.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்னும் தலை மற்றும் கண் வலியை உண்டாக்கும். உள் வாங்கும் திறன் மற்றும் கண்காணிப்பு திறனின் குறைபாடு ஏற்படும்.
செல்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கார்பல் டன்னல் (Carpal Tunnel) என்னும் நோய்க்குறியின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். இது கட்டை விரலில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
உங்களுக்கு செல்போன் அடிப்பது போன்றும் வைப்ரேட் ஆவது போன்றும் மாயையை ஏற்படுத்தும்.
குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு:
குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டும் காலம் மாறி, செல்போன் மூலம் கார்ட்டூன் பொம்மைகளை காட்டி சோறு ஊட்டி விடுகிறார்கள். செல்போனை கொடுத்து குழந்தையின் அழுகையை எளிமையாக நிறுத்தி விடலாம். அந்த அளவிற்கு உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி காணப்படுகிறது. தங்களின் குழந்தைகளின் உடல்நலம் இதன்மூலம் பாதிப்பை ஏற்படுத்துமா..? என்பது பற்றி தெரியாமல் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
இளைஞர்களிடம் செல்போன் பயன்பாடு:
இன்றைய இளம் தலைமுறையினர் பொது இடங்களில் அதிகப்படியாக செல்போன் பயன்படுத்துகிறார்கள். மேலும், நண்பர்களிடம் முகம் பார்த்து பேசும் காலம் மாறிப்போய், செல்போன் மூலம் மணிக்கணக்கில், பேசிக்கொள்கிறார்கள்.
பிரச்சனைகளை தடுக்கும் எளிய வழிமுறைகள்;
செல்போன் தொடர்ச்சியாக நீண்ட நேரம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அரை மணி நேரத்திற்கு மேல் செல்போனை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம்.
செல்போன் பயன்படுத்தும் போது, மெசேஜ் செய்வதை விட, வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது உங்கள் கட்டைவிரலில் உள்ள அழுத்தத்தை குறைக்க உதவும்.
தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும். வீட்டிற்கு வந்தால், செல்போனை தவிர்த்து குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும்.
மாலை நேரத்தில் தவறாமல் உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
செல்போன் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு புதிய செயலிகள் (App) வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்கள் என்பதனை எளிதாக அளவிட முடியும்.