Sharing is caring!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணியளவில் துவங்க இருப்பதால், கடந்த 6 சீசன்களிலும் சர்சையை ஏற்படுத்திய போட்டியாளர்களின் தொகுப்பை பார்ப்போம்.

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. கடந்த ஆறு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் இன்று மாலை 6 மணியளவில் துவங்கவுள்ளது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறுகிய காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துவிடுவார்கள்.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் 7-வது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட் ரெடி..! அடடே ..! இந்த நடிகையின் மகள் இருக்காங்களா..?

அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அதில் சிலருக்கு பாசிட்டிவ் பப்ளிசிட்டியும், சிலருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியும் கிடைக்கும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் ஜூலி துவங்கி 6 வது சீசன் அசீம் வரை பலரும் சர்ச்சையை கிளப்பினர். அந்த வகையில், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக மாறிய நபர்களை பற்றிய குட்டி ரீவைண்ட் இந்த பதிவில் பார்க்கலாம்.

முதல் சீசன்:

முதல் சீசனில் ஆரவ், ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்தம் பெரும் சர்ச்சையானது. அதேபோல், ஜூலி சக போட்டியாளரான ஓவியாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஓவியாவிற்கு ஆதரவாக ஆர்மி உருவானது. உண்மையை நிரூபிக்க வார இறுதி நாளில் ஜூலிக்காக போடப்பட்ட குறும்படம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது. இதனையடுத்து, வந்த 5 சீசன்களிலும் எத்தனை குறும்படம் போட்டாலும், முதல் சீசனில் ஜூலிக்காக போடப்பட்ட குறும்படம் தான் நினைவிற்கு வரும்.

இரண்டாவது சீசன்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தாத்தா சர்சைக்குரிய போட்டியாளர்களின் ஒருவர் ஆவார். குறிப்பாக, ஹிட்லராக அவர் ஏற்று நடித்த ஒரு கதாபாத்திரத்தில் சொன்னதைக் கேட்காததால், தாடி பாலாஜியின் தலையில் குப்பையை கொட்டினார். இது சோசியல் மீடியாவில் கடும் விவாதத்தை கிளப்பியது.

மூன்றாவது சீசன்:

வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அந்த சீசன் பரபரப்பாக பேசப்படுவதற்கும், டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரிக்கவும் வனிதா மிக முக்கிய காரணமாக இருந்தார். அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் கன்டென்ட் ராணியாக வளம் வந்தார். மேலும், இந்த சீசனில் கவின், லாஸ்லியா காதல் விவகாரம் சர்சையை கிளப்பியது.

நான்காவது சீசன்:

அனிதா சம்பத், சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் அடிக்கடி ஆரியிடம் சண்டை போட்டது கடும் பேசுபொருளாக மாறியது. சனம் ஷெட்டி, ஆரியை பார்த்து வளர்ப்பு சரியில்லை என்று சொன்னது. அர்ச்சனா, நிஷா, கேபிரிலா மற்றும் ரியோ ராஜ் ஆகியோரின் அன்பு டீம் உருவானது சமூக வலைத்தளத்தில் கடும் சர்சையை கிளப்பியது.

ஐந்தாவது சீசன்:

வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த பவானி – அமீர் காதல் அந்த நேரத்தில் சர்சையாக பேசப்பட்டது. அமீரும், பாவனியும் வீட்டில் இருந்தபோது நெருக்கமாக இருந்தது இணையத்தில் கடும் விவாத பொருளாக மாறியது. நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இருவரும் ‘லிவிங் டு கெதர்’ உறவில் இருந்தார்கள். இப்போது, இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

ஆறாவது சீசன்:

அசீம் சர்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவர் ஆவார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். இவர் சக போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, பெண்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இழிவாக பேசினார். இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இணையத்தில், கடும் விவாதம் எழுந்தது.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் 7-வது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட் ரெடி..! அடடே ..! இந்த நடிகையின் மகள் இருக்காங்களா..?

(Visited 100 times, 1 visits today)

Sharing is caring!