திருமணத்திற்கு பிறகு பாலியல் உறவு என்பது ஆண் -பெண் ஆகிய இருவருக்கும் இன்பமான உச்சக்கட்ட இன்பத்தை அள்ளி தருகிறது. பாலியல் உறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். ஆனால், சில நேரம் கட்டுப்பாடுகள் இல்லாமல் தேவைக்கு அதிகமாக பாலியல் உறவில் ஈடுபட்டால் பிறப்புறுப்பில் வலி அதிகமாக இருக்கும். உடலுறவின் போது பெண்ணுறுப்பில், ஆணுறுப்பை செலுத்தும் போது இத்தகைய வலி ஏற்படும். வலி மிகுந்த உடலுறவு டைஸ்பெரோனியா என்று அழைக்கப்படுகிறது. இதனை குறிக்கும் சில அறிகுறிகள்,அதனை தடுக்கும் சில வழிமுறைகள் என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
ஆண்களுக்கு ஆணுறுப்பு மிகவும் இறுக்கமாக இருக்கும் போது இத்தகைய வலி ஏற்படும். இது போன்ற நேரத்தில் அவர்கள் உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறுப்பில் வலி அதிகரிக்கும். இதனை தவிர்த்து, ஆணுறுப்பில் தொற்றுகள் இருந்தால் உடலுறவில் வலி அதிகரிக்கும்.
பெண்களுக்கு உடலுறவின்போது இத்தகைய வலி வயிற்றுப்பகுதிக்கு கீழே ஏற்படும். பெண்களுக்கு, பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவம் முறையாக சுரக்கவில்லை என்றால் இவை ஏற்படும். உங்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவாக இருக்கும் பட்சத்தில், பிறப்புறுப்பில் அந்த திரவம் சுரக்காது. இதனால் பெண்ணுறுப்பில் வலி அதிகரிக்கும்.
முதன் முதலில் உடலுறவு மேற்கொள்ளும் பெண்கள், பிறப்புறுப்பில் வலி ஏற்படுமோ..? ரத்தம் வருமோ..? என்ற அச்சத்துடன் உடலுறவு கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு பிறப்புறுப்பில் வலி அதிகரிக்கும்.
மாதவிடாய் நாட்களில் பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படும். இதுபோன்ற நேரத்தில் நீங்கள் உடலுறவு மேற்கொண்டால், பிறப்புறுப்பில் வலி ஏற்படும். பெண்ணுறுப்பில் தொற்றுநோய்கள், கட்டிகள் இருந்தால் உடலுறவின் போது வலி ஏற்படும்.
பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதை தடுக்க எளிமையான வழிமுறைகள்:
தம்பதிகள் இருவரும் உடலுறவு கொள்ளும் போது, ஒருவருக்கு ஒருவர் தொடுதல், தீண்டுதல், கட்டி பிடித்தல், அணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்ற பல்வேறு முன் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது, பெண்ணுறுப்பில் திரவம் நன்றாக சுரக்கும். இதனால் உடலுறவி கொள்வது எளிமையாக இருக்கும்.
இதனை தவிர்த்து, சிலர் வெறும் தேங்காய் எண்ணெய் கூட உபயோகிப்பார்கள். அது கட்டாயம் வலியை குறைக்கும்.
உடலுறவில் ஈடுபடும் போது, ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருந்தல் அவசியம். ஒருவேளை இருவரில் ஒருவர் இல்லறத்தில் உடல் மற்றும் மனரீதியாக தயாராக இல்லாவிட்டாலும், உடலுறவில் ஈடுபட வேண்டாம். வற்புறுத்தி செய்தால் வலி ஏற்படும்.
உடலுறவிற்கு முன்பு உடற்பயிற்சி செய்யுங்கள். இடுப்பு பகுதி தசைகளுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் போது பாலியல் உறவு இன்பமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகரித்தால், அந்த இடத்தில் ஐஸ் பேக் போட்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இதனை தவிர்த்து, உங்களுக்கு அந்த இடத்தில் தொடர் வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.