Pregnancy Piles: ஒரு பெண் தாய்மையடைவது அவரது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படியாக, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது, என்பதை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்பதை பார்ப்போம்.
ஹர்மோன்கள் மாற்றத்தால் மலச்சிக்கல்:
ஹார்மோன்கள் மாற்றம் காரணமாக ஒரு பெண்ணிற்கு மலச்சிக்கல் ஏற்படும். ஏனெனில், இந்த நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் உடலில் சாதாரண அளவை விட புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகமாக சுரக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பு:
இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் தேவைப்படும். இதற்கான உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, அதிக அளவிலான இந்த ஊட்டச்சத்துக்கள் சில நேரம் மலச்சிக்கல் அபாயத்தை அதிகப்படுத்துகிறது.
நீர் ஆகாரம் அதிகம் வேண்டும்:
ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் போது, முன்பை விட அதிக அளவு நீர் ஆகாரம் தேவைப்படும். இதனால் உடலானது தண்ணீரை வேகமாக உறிஞ்சுகிறது. இதனால், மலச்சிக்கல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க கர்ப்பிணிப் பெண்கள், அடிக்கடி நீர் சத்து அதிகம் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேபோன்று, தினமும் 1முதல் 2 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
கருப்பை விரிவாக்கம்:
கர்ப்பிணி பெண்களுக்கு கரு வளர ஆரம்பிக்கும் போது, கருப்பையில் குழந்தைக்கு அதிக இடம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களின் கருப்பை மெதுவாக விரிவடைகிறது. இது குடல் இயக்கத்தை மெதுவாக்கும். அப்போது, உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, மேற்சொன்ன விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதன்படி, செயல்படுவது முக்கியம்.