குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணித்திருக்கிறார். குரு பார்த்தால் யோகம் வரும் என்பார்கள். குரு பகவான் செல்வம், புகழ், பெருமை மற்றும் திருமணம் ஆகியவற்றின் காரணியாக செயல்படுகிறார். குருவின் மாற்றம், நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். வரும், செப்டம்பர் 4, 2023 அன்று மேஷ ராசியிலேயே குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதையடுத்து வரும் மே 1, 2024 வரை குரு பகவான் மேஷ ராசியில் பயணித்துக் கொண்டிருப்பார். இதனால், குறிப்பிட்ட சில ராசிகள் பண மழையில் நனைய காத்திருக்கிறார்கள். குறிப்பாக, மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளுக்கு இதன் முழு பலன் கிடைக்கப்போகிறது. இந்த ராசிகளின் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.
மேஷம்:
இந்த ராசியினருக்கு நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் வீட்டில் எப்போதும், மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுனம்:
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இருப்பினும், பணியிடத்தில் அதிக கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் யோகம் பிறக்கும். நீண்ட நாள் தடை விலகும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
சிம்மம்:
சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கைக்கு வரும். அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பின் பலன் கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்:
குருவின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெருகும். பணியிடத்தில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு இருக்கும்.