Sharing is caring!

The side effects of Dates During Summer: பேரிச்சம்பழம் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது. எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கனிமம் நிறைந்த சத்துக்கள் இரத்த சோகை நோயாளிகளுக்கு சிறந்த பலன் அளிக்கிறது. அதுமட்டுமின்று, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இதய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும், பேரிச்சம்பழம் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை நீக்கி, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். டைப் 2 நீரழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா..? என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. அதேபோல், வெயில் காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிட கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

குளிர் காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது. அதேநேரம், கோடை காலத்தில் உடலில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இதுபோன்ற நேரத்தில், நீங்கள் பேரிச்சம்பழம் உட்கொள்வது உடலின் உட்புற வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இருப்பினும், கோடை காலத்தில், பேரிச்சம்பழம் சாப்பிடும் போது சில குறிப்பிட்ட விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், உடலுக்கு பல்வேறு தீங்கு விளைவிக்கும்.

வயிறு தொடர்பான பிரச்சனை:

வயிறு எரிச்சல் மற்றும் அல்சர் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு நார்ச்சத்து, நிறைந்த பேரிச்சம்பழம் உட்கொள்வது செரிமானத்தில் சிரமம் ஏற்பட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும், இதில் இருக்கும் பிரக்டோஸ் வெறும் வயிற்றில் உண்ணும் போது சிலருக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும். எனவே, உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீரழிவு நோயாளிகளுக்கு உகந்ததா..?

அதுமட்டுமின்றி, இனிப்பு சுவை நிறைந்த பேரிச்சம்பழம், நீரழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும். எனவே, கோடை காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடும் முன்பு அவற்றை தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக, நீரழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம், அளவோடு உட்கொள்வது நல்லது.

(Visited 46 times, 1 visits today)

Sharing is caring!