Guru Peyarchi 2023: குருபகவான் செல்வம், அறிவாற்றல் மற்றும் கல்வி போன்றவற்றின் காரணியாக இருக்கிறார். ஒருவருடைய ஜாதகத்தில் வியாழன் சாதகமாக இருப்பது, அவர்களது வாழ்வில் சிறந்த வெற்றியை தரும். அதன்படி, ஏப்ரல் 22 ஆம் தேதி (அட்சய திருதியை நாளில்) வரும் வியாழன் அல்லது குருவின் மாற்றத்தால் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கப்போகிறது. ஆம் அந்த நாளில், காலை 5 மணியளவில் தேவகுரு வியாழன் மீன ராசியில் இருந்து விலகி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளார். இதையடுத்து அவர், மே 1, 2024 வரை அதாவது அடுத்த 1 வருடம் இந்த ராசியில் அமர்ந்திருப்பார். இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இன்னும் 3 நாட்களில் சிறப்பான பம்பர் பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
கும்பம்:
குருவின் மாற்றத்தால் கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரம் சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்கள் தடைபட்ட காரியம் முடிவடையும். திருமண யோகம் கைகூடும். பணியில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்:
சிம்மம் ராசியினருக்கு குருவின் மாற்றத்தால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில், வெற்றி பெறுவீர்கள். உங்களது வாழ்வில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் செல்லும் யோகம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வருமானம் பெருகும்.
தனுஷ்:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும், நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். இந்த நேரத்தில், நீங்கள் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குரு பகவான் இடமாற்றம் உங்களுக்கு அனைத்து வேலைகளிலும் சிறந்த வெற்றியை தரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.