Relationship Secrets: இன்றைய நாட்களில் பெரும்பாலான தம்பதிகள் உறவில் திருப்தி இல்லாமல் இருக்கிறார்கள். செக்ஸ் என்பது உறவில் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருவேளை உங்கள் துணை நீண்ட நாட்களாக, உங்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்த்திருந்தால், உறவில் சிக்கல் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால், அவர்கள் வேறொருவரின் அன்பால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். இதனால், குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முதன்மையான காரணம் உடலுறவில் சலிப்பு ஏற்படுவது மற்றும் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஆகும். ஒருவரின் பாலுணர்வைத் தூண்டி, பாலியல் இன்பத்தை அனுபவிக்க காலம் காலமாக பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டு வருகிறது. இருப்பினும், உங்கள் துணை உங்களுடன் உடலுறவில் ஈடுபட விரும்பவில்லை என்பதை தெரிந்து கொள்ளும் அறிகுறிகள் என்ன என்பதை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
உறவில் உற்சாகம் இல்லாமல் இருப்பது:
முதன்மை காரணமாக, உங்களுடன் உடலுறவில் ஈடுபடும் போது உற்சாகம் இல்லாமல் இருப்பது. உடலில், ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, உடல் அசதி போன்ற காரணங்களால் உற்சாகம் இல்லாமல் இருப்பதால் உறவில் எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது. ஆனால், ஒருபோதும் அவர்கள் உடலுறவில் விருப்பம் இல்லாமல் இருப்பது. மேலும், உணர்ச்சி ரீதியாக உங்களுடன் தொலைவில் இருப்பதாக உணர்ந்தால், உங்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள விருப்பம் இல்லை என்று அர்த்தமாம்.
செக்ஸ் குறித்து தங்களின் முழு ஆசைகளையும் கட்டுப்படுத்துவது:
உங்கள் துணை தங்களின் பாலியல் ஆசைகள், விருப்பங்கள் போன்றவற்றை தங்களின் துணையிடம் தெரிவிக்காமல் எப்போதும் அமைதியாக இருப்பது. செக்ஸ் குறித்து தங்களின் முழு ஆசைகளையும் கட்டுப்படுத்துவது, அவர்களுக்கு உறவில் விருப்பம் இல்லை என்பதை முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.
உறவில் வலி இருப்பது போல் அசௌகரியத்தை வெளிப்படுத்துவது:
உங்கள் துணைக்கு உறவில் விருப்பம் இல்லாமல் இருந்தால், அவர் உடலுறவில் ஈடுபடும் போது அடிக்கடி வலி ஏற்படுவதை போல் உங்களிடம் அசௌகரியத்தை வெளிப்படுத்துவார். அதுபோல், உறவை தான் முதலில் துவங்க முன்வராமல் இருப்பது. எனவே, இதுபோன்ற அசௌகரியமான சூழ்நிலையை இருவரும் உணர்ந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
உச்சகட்டத்தை தவிர்ப்பது:
உங்கள் துணை பாலியல் உறவில் உச்சகட்டத்தை வெளிப்படுபத்தாமல் இருப்பது அல்லது உச்சகட்ட நிலையை அனுபவிக்காமல் இருப்பது. அதுமட்டுமின்று, போலியான உச்சகட்ட நிலையை வெளிப்படுத்துவது. எனவே, பாலியல் உறவில் இருக்கும் போது உங்கள் துணை, உடலால் மட்டுமின்று உணர்ச்சி ரீதியாகவும் உங்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், உறவு என்பது அவ்வளவு திருப்தியாக இருக்காது.