Sharing is caring!

Healthy Benefits of Dragon Fruit: இந்திய விவசாயிகள் மத்தியில் ட்ராகன் பழம் விளைச்சலில் அதிக வருவாயை ஈட்டி தருகிறது. இவை சிவப்பு டிராகன் பழம் மற்றும் வெள்ளை டிராகன் பழம் என இரண்டு வகைகளில் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாகும். இந்த ட்ராகன் பழம் லாபம் தருவதில் மட்டுமல்லாது, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ட்ராகன் பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை நிறைந்த டிராகன் பழம் பார்ப்பதற்கு முட்கள் நிறைந்தது போன்ற பழமாகும்.

Credit: pexels.com/

இந்த ட்ராகன் பழத்தை அடிக்கடி உட்கொள்வது, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அத்துடன் உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவினை கட்டுப்படுத்த, நீரழிவு நோய், புற்றுநோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்த அருமருந்தாக ட்ராகன் பழம் செயல்படுகிறது. இதன் விதை பல்வேறு முறைகளில் பயன்படுகிறது. எனவே, இந்த ட்ராகன் பழம் உட்கொள்வதால், உடலுக்கு என்னென்னெ ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது:

Credit: pexels.com/

நீரழிவு நோயாளிகளுக்கு ட்ராகன் பழம் மிக சிறந்த அருமருந்தாக செயல்படுகிறது. இதில் இருக்கும் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தி, நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முக்கியமாக இது டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பயனளிக்கிறது.

செரிமானம் பிரச்சனையை சரிசெய்ய உதவும்:

இன்றை மேற்கத்திய உணவு கலாச்சாரத்தில், நம்மில் பலர் செரிமானம் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த ட்ராகன் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும்:

Credit: pexels.com/

ட்ராகன் பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது:

ட்ராகன் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவும்:

Credit: pexels.com/

உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு, ட்ராகன் பழம் மிகச்சிறந்த தேர்வாக இருக்கிறது. இது உடலில் இருக்கும் தேவைற்ற கலோரிகளை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவும்:

இந்த ட்ராகன் பழம் உடலில் இருக்கும் இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Credit: pexels.com/

முகம் ஜொலிக்கும்:

இந்த ட்ராகன் பழத்தினை எடுத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றை நீக்கி உங்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், வெயில் காலத்தில் சருமத்திற்கு குளிர்ச்சியை தரவும், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமலும், பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்.

(Visited 14 times, 1 visits today)

Sharing is caring!