Vaginal white discharge problem: இயற்கையாகவே பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும். உடலில் ஏற்படும் அதிக வெப்பநிலை காரணமாக பெண்களுக்கு சூடு விழுதல் பிரச்சனை ஏற்படும். இதற்கு உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்கை முறை மாற்றம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே, நாம் ஒவ்வொருவரும் முறையான வழக்கத்தை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், வெள்ளைப்படுதலால் பெண்கள் உடல் ரீதியாக பல வித பிரச்சனகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
வெள்ளைப்படுதல் மாதவிடாய் வருவதற்கு முன் இயல்பாக ஏற்படுகிறது. கருப்பை வாயிலிருந்து சுரக்கும் நீர் தான் வெள்ளைப்படுதல் ஆக வெளியே தெரிகிறது. இருப்பினும், அடர் மஞ்சள் நிறத்தில் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் ஒருமுறை மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும். இந்த பிரச்சனை இருக்கும் போது ஒருவருக்கு அரிப்பு, எரிச்சல், வலி, சோர்வு, தலைவலி , துர்நாற்றம் போன்றவை ஏற்படும்.
வயிற்றில் குடல் புழுக்கள் இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம். சில நேரம், கூடுதலான துர்நாற்றம் ஏற்பட்டு இதன் நிறத்தில் மாற்றம் இருந்தால் உடலில் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
சுகாதாரம் அவசியம்:
பிறப்புறுப்பினை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். உள்ளாடைகளை தேர்வு செய்யும் போது, பருத்தி துணியால் ஆன உள்ளாடைகளை தேர்வு செய்வது அவசியம்.
வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் இயற்கையான வீட்டு வைத்திய குறிப்புகள்:
வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பதால் தினமும் 1 மாதுளை சாப்பிடலாம். மாதுளை உடலில் உள் உறுப்புகளை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும்.
மாதுளையின் தலை முதல் கால் வரை அனைத்தும் பயன் அளிக்கக்கூடியது. எனவே, மாதுளை இலைகளை அரைத்து கஷாயம்போட்டு குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் உடனடியாக சரியாகும்.
கொய்யா இலைகளை தண்ணீரில் அரைத்து கொதிக்க வைத்தால் நிச்சயம் நல்ல பலன் தரும்.
உடல் சூடு காரணமாக வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், தினமும் இளநீர் எடுத்துக் கொள்வது நல்லது. அப்படி இல்லையென்றால், வாரத்தில் இரண்டு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெந்தயம் ஒரு டீஸ்புன் எடுத்து, இரவில் ஊற வைத்து காலையில் குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும். அதேபோல், இரண்டு முதல் மூன்று வெண்டைக்காய் எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடித்து வந்தால், வெள்ளைப்படுதலில் இருந்து நிவாரணம் தருவதுடன் உடல் சூடும் குறையும்.
அதேபோல், தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது, உடலில் வெள்ளை படுதலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஏனெனில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நிச்சயமாக உடல் ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், தினமும் காலையில் பசும்பால் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், உடல் சூடு வராமல் பாதுகாக்கும்.
வெயில் காலத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தரும். அதேபோல், இரண்டு முதல் மூன்று துளசி இலைகளை தண்ணீரில் ஊற வைத்துமறுநாள் காலையில் குடிப்பது நல்லது .