Sharing is caring!

Condom mistakes: உடலுறவின் போது கரு உண்டாவதை தடுப்பதற்கு ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலுறவின் மூலம் பரவக்கூடிய (ஹச்ஐவி) HIV போன்ற பெரும்பாலான நோய் தொற்றுகளை தவிர்ப்பதற்கும் ஆணுறை பயன்பாடு மிகவும் அவசியமாக உள்ளது. சிலருக்கு குழந்தை பேறுக்காக உடலுறவு வைத்துக் கொள்வதில் விருப்பம் இருக்காது. இவர்களுக்கு, உறவின் உச்சகட்ட நிலையில் தன்னை அறியாமல் விந்து உள்ளே செல்வதை தடுக்கும் பாதுகாப்பு கவசமாகவும் ஆணுறை இருக்கிறது. ஆணுறை பயன்பாடு என்பது சரியான முறையில் இருந்தால், குழந்தை பிறப்பதில் இருந்து 95% பாதுகாப்பு கிடைக்கும்.

இருப்பினும், ஒரு சிலருக்கு அதனை எப்படி பயன்படுத்துவது ..? எங்கு வாங்குவது ..? பக்க விளைவுகள் உண்டா..? என்பது போன்ற சந்தேகங்களுக்கு இந்த பதிவின் மூலம் அதன் முழு விவரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

இந்தியாவில் ஆணுறை பொதுவாக அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.

முதலில் கடைக்கு சென்று ஆணுறை வாங்கும் போது, அதன் தரத்தை சரிபார்த்து வாங்க வேண்டும். முதலில், காலாவதி தேதியை சரிபார்க்கவும். இல்லையென்றால், உடலுறவு மேற்கொள்ளும் போது சில நேரம் ஆணுறை கிழிந்து விந்து வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை நீங்கள் உறவில் இருக்கும் போது ஆணுறை கிழிந்த பிறகும். கட்டுப்படுத்தமுடியாத உணர்ச்சியால் விந்து வெளியேறிவிட்டால், முதல் மூன்று நாட்களுக்கு கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும்.

இது ஓவுலேசன் (Ovulation) நடப்பதை தாமதப்படுத்தவும், கருவுற்ற முட்டையை உங்கள் கருப்பையில் பொருத்துவதைத் தடுக்கவும் உதவும். இதனால் 95% கர்ப்பம் தரிப்பது தாமதமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆணுறை கிழிந்தது தெரிய வந்தவுடன் பிறப்புறுப்பை சோப்பு கொண்டு தண்ணீரில் மெதுவாக கழுவவும். இதற்காக நீங்கள் கிருமி நாசினிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மேலும், சூடான மற்றும் குளிர்ந்த வெப்பநிலையில் வைக்கப்பட்டுள்ள ஆணுறை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

எப்போதும், கடைக்கு சென்று ஆணுறை வாங்கும் போது, கூடுதலாக ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுதல் நல்லது. ஒருவேளை உங்களுடைய ஆணுறை கிழிந்து விட்டால், நிச்சயமாக வேறொரு ஆணுறையை பயன்படுத்தலாம்.

மேலும், ஆணுறை வாங்கும் போது எப்போதும் உங்களின் அளவினை சார்பார்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் சிறியது அல்லது பெரியது உங்களுக்கு பல்வேறு தீங்கு விளைவிக்கும்.

ஆணுறை பெரும்பாலும் லேட்டஸ்க், எனப்படும் ரப்பர், பாலியுரிதேன், மற்றும் பாலிஐசோபிரேன் ஆகிய மெட்டீரியல்களால் செய்யப்படுகிறது. இதனை பயன்படுத்தும் போது, ஆணுறுப்பில் வைத்து சுருளை போன்று இழுத்து விட வேண்டும். முக்கியமாக அதில் பபுள்ஸ் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், எண்ணெய் அடிப்படையிலான ஆணுறை லூப்ரிகண்டுகள் பிறப்புறுப்பு மற்றும் மலக்குடல் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே லூப்ரிகண்டுகளை பயன்படுத்த விரும்பினால், தண்ணீர் அல்லது சிலிகான் அடிப்படையிலான ஒன்றைப் பயன்படுத்தவும்.

ஒருவேளை, நீங்கள் ஆணுறை அணியும் போது, உங்களுக்கும் அல்லது உங்கள் பார்ட்னருக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாக ஒன்றாகும்.

(Visited 69 times, 1 visits today)

Sharing is caring!