Sharing is caring!

Nayanthara Salary: ‘பைஜூ பாவ்ரா’ படத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 13 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். அதற்கு படக்குழு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா:

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர். இவர், கோலிவுட் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தென் இந்திய சினிமாவில் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர்.

மேலும் படிக்க….விஜய் கேரியரில் முதல் நாள் வசூலில் 100 கோடியை கடந்து…புதிய சாதனை படைத்த லியோ..!

பாலிவுட் திரையுலகில் கலக்கும் நயன்தாரா:

இதையடுத்து, அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த திரைப்படத்தில் இளம் வயது ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து, பாலிவுட் திரையுலகில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

மேலும் படிக்க….விஜய் கேரியரில் முதல் நாள் வசூலில் 100 கோடியை கடந்து…புதிய சாதனை படைத்த லியோ..!

இதனால், இந்தியளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறிவிட்டார் நயன்தாரா. இதனால் இவருடைய மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது.

வசூலில் 1000 கோடியை கடந்த ஜவான்:

ஜவான் திரைப்படம் வசூல் ரீதியாக 1000 கோடியை கடந்து மிக பெரிய அளவில் ஹிட் அடித்ததால், இந்தி சினிமாவின் பார்வை நயந்தாரா மீது விழுந்துள்ளது.

இவருடைய சம்பளம் சில வருடங்களுக்கு முன்பு வரை ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக இருந்தது. இதையடுத்து, தனது சம்பளத்தை படிப்படியாக உயர்த்திய நயன்தாரா ஜவான் படத்தில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.

சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நயன்தாரா:

இந்த நிலையில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘பைஜூ பாவ்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் கதாநாயகனாக ரன்வீர் சிங்கும், கதாநாயகியாக ஆலியா பட்டும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 13 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். அதற்கு படக்குழு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக இந்தி சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க….விஜய் கேரியரில் முதல் நாள் வசூலில் 100 கோடியை கடந்து…புதிய சாதனை படைத்த லியோ..!

(Visited 33 times, 1 visits today)

Sharing is caring!