Trisha Salary: மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் வந்த இவர், தமிழ் சினிமாவில், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து அறிமுகமானவர். இதையடுத்து, த்ரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகை:
இதனால், கோலிவுட்டில் இவருக்கு வாய்ப்புகள் குவிய விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
தற்போது, தமிழ் சினிமாவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும், ஒரே நடிகை என்ற பட்டதை த்ரிஷா பெற்றுள்ளார்.
ஏற்கனவே, விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி போன்ற படங்களில் நடித்துள்ளார். சுமார் 15 வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில், விஜய்க்கு மனைவியாக நடித்துள்ளார். இந்த படத்தில், இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தது.
வசூலில் 600 கோடியை கடந்து சாதனை:
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக பின்தங்கி இருந்தாலும், வசூலில் 600 கோடியை கடந்து சாதனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
நாயகியாக தி ரோடு, ராங்கி:
இவர், ஹீரோயின் சப்ஜெக்ட் இருக்கும் சில படங்களில் நடித்தாலும், நாயகியாக தி ரோடு, ராங்கி சில படங்களில் நடித்து தனித்துவம் காட்டி வருகிறார். அதுமட்டும் இல்லாமல், கடந்த சில வருடங்களாக இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளன.
த்ரிஷா தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார்:
இந்த நிலையில், லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த த்ரிஷா அந்த படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
கைவசம் வைத்துள்ள படங்கள்:
இதை தொடர்ந்து, தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்திய த்ரிஷா, சமீபத்தில் வெளியான லியோ படத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
அதன்படி, த்ரிஷா தனது சம்பளத்தை 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாய் வரை உயர்த்தியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது, விஜய்யின் லியோ படத்திற்கு பிறகு, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் தக் லைஃப் போன்ற படங்களிலும் த்ரிஷா நடிக்க உள்ளார். இதன் மூலம், கோலிவுட்டில் அதிகம் தேடப்படும் நடிகைகளில் ஒருவராக த்ரிஷா மாறி இருக்கிறார்.