World Breastfeeding Week: நம்முடைய குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்தில் இருந்தே ஆரோக்கியமான உணவு வகைகளை கொடுத்து பழக வேண்டும். இல்லையென்றால், இன்றைய மேற்கத்திய உணவுகள் உடல் எடை அதிகரிப்பு, உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை உடலில் உண்டாக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு காலை நேரத்தில் அதிக சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கு அன்றைய நாளுக்கான ஊட்டச்சத்துகள் சரியான அளவில் கிடைக்கும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் குழந்தைகள் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமான வாழ்கை வாழ முடியும்.
குழந்தையின் ஐந்தாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் சேர்த்து சில தேக்கரண்டி திரவங்களை, தண்ணீருடன் சேர்த்து கொடுக்க துவங்குங்கள். நெய் அல்லது எண்ணெய் வடிவில் சிறிது கொழுப்பைச் சேர்க்கவும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் தவறாமல் உணவில் சேர்க்கப்பட வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இரும்புச் சத்து உறிஞ்சுவதை அதிகரிக்கும்.
குழந்தை தானகவே உணவு உண்பதை ஊக்குவிக்க வேண்டும். அதேநேரம், எப்போதும் குழந்தையை தனியாக உணவை வைத்துக் கொண்டு விட்டுவிடாதீர்கள். ஏனெனில், இவை சில நேரம் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.
குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை வேக வைக்காத பச்சை முட்டை மற்றும் தேன் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
பயணங்களின் போது ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களை அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
கோதுமை மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒன்றை சேர்த்து நீர், வெல்லம், நெய் ஆகியவை சேர்த்துக் கொண்டு கூழ், அல்லது கஞ்சு செய்து கொடுக்கலாம்.
ஆரம்பத்தில் குழந்தைக்கு திரவ நிலையில் உணவுகளையும், பின் 8முதல் 9 மாதங்களில் அதிக திட தன்மையுடன் குழந்தைக்கு கொடுக்கவும்.
பால் பொருட்கள்:
வளரும் குழந்தைகளுக்கு பால் தொடர்பான தயிர், சீஸ், போன்ற பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஏராளமான சத்துக்களை அள்ளிக் கொடுக்கிறது. இவை எலும்புகள், பற்கள், நகங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பச்சிளம் குழந்தையை பராமரிக்க எளிய டிப்ஸ்:
புதிய துணிகளை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன், அந்த துணிகளை சுடுநீரில் நனைத்து, நன்கு வெயிலில் உலர்த்தி பின் உபயோகப்படுத்தவும், ஏனெனில், அத்துணிகளில் அழுக்கு மற்றும் தூசி இருந்தால் அது பச்சிளம் குழந்தையின் தோலை எரிச்சலூட்டச் செய்யும்.
.குழந்தையை குளிப்பாட்டும் போது, மென்மையான சோப்பையும், வெதுவெதுப்பான நீரையும் பயன்படுத்த வேண்டும்.ஏனெனில், மிகவும் சூடான நீர், அரிப்பையும், வறண்ட சருமத்தையும் ஏற்படுத்தக் கூடும்.
குளிர் காலத்தில், வெதுவெதுப்பான கம்பளி உடைகள், கால் உறை, கை உறை, முதலியவற்றை பயன்படுத்தவும். குறிப்பாக குழந்தையின் காது மற்றும் தலைப்பகுதியை முழுமையாக போர்த்தி வைக்கவும்.
குழந்தையை கவனமாக கண்காணித்துக் கொண்டே இருக்கவும்.குழந்தையை கையாளும் போது மிகவும் கவனமுடன் கைகளை சுத்தமான கழுவி இருக்க வேண்டும்.
குழந்தையின் பக்கத்தில் சிறிய, கூர்மையான மற்றும் சூடான பொருட்கள் வைப்பதை தவிர்க்கவும்.
குழந்தைக்கு தலையணை மற்றும் போர்வைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில், சில நேரம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் உருவாக்கக்கூடும்.