Relationship tips: ஆண்கள், திருமணத்திற்கு முன்பு தங்களுக்கு வரப்போகும் மனைவி தேவதை போல் அழகாக ஜொலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். ஒருவேளை, திருமணத்திற்கு பிறகு அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் ஆண்கள் வேறொரு திருமணமான பெண்ணின் வலையில் எளிதில் விழுகிறார்கள். இவை சில சமயம் ஆண்களை கள்ள உறவில் ஈடுபட தூண்டும். இது குடும்பத்தில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அப்படியாக, திருமணத்திற்கு பிறகு ஆண்களுக்கு, பிறரின் மனைவி மீது ஈர்ப்பு வருவதற்கான உளவியல் காரணங்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
உறவில் முழு திருப்தி இல்லாமை:
ஆண்களுக்கு பிறரின் மனைவி மீது ஈர்ப்பு வருவதற்கு, பாலியல் உறவில் முழு திருப்தி இல்லாமை முக்கிய காரணமாக இருக்கலாம். பாலியல் உறவில் மனைவிக்கு விருப்பம் இல்லாமல் இருப்பது அல்லது இருவருக்கும் இடையே குறைவான நெருக்கம் இருக்கும் போது இதுபோன்ற சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தம்பதிகள் பிரச்சனையை நீண்ட நாள் தொடராமல் இருவருக்கும் இடையே மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
பிறரின் மனைவியுடன் ஒப்பிட்டு பேசுவது:
ஆண்கள் தங்களின் மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிட்டு பேசுவது இதற்கு முக்கிய காரணம் ஆகும். எப்போதும், தங்கள் நண்பரின் மனைவி அல்லது உறவினரின் மனைவியை பற்றி புகழ்ந்து பேசுவது. தனது மனைவியை விட மற்றவர்களின் மனைவி மிகவும் சிறந்தவர்கள் என்று நினைப்பதால் இவை தோன்றும்.
புதிதாக முயற்சி செய்யும் போது:
ஆண்கள் எப்போதும் புதிய அனுபவம் கிடைக்க விரும்புவார்கள். வாழ்கை மற்றும் தொழில் அவர்களுக்கு திருப்தி இல்லாமல் போகும் போது புதிய விஷயங்களை தேடி செல்வார்கள். கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை வரும்போது, ஆறுதலுக்காக வாழ்வில் பக்குவமான மற்றுமொரு திருமணமான பெண் தோழியை தேடி செல்கிறார்கள். இவை நீண்ட நாள் தொடரும் போது, பெண்ணின் கவர்ச்சியால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
இவைகள், தம்பதிகள் இருவருக்கும் இடையே, அன்பு, புரிதல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததை குறிக்கிறது. இவை தொடர்ந்தால் உறவில் நாளடைவில் பல்வேறு சிக்கலுக்கு வழிவகுக்கும். ஏனெனில், திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் ஏற்படும் உறவு மிகவும் அழகானது. எனவே, ஆண்கள் உங்கள் மனைவியை காதலிக்க துவங்க வேண்டும். அப்படி செய்தால், உங்கள் மனைவி உங்கள் கண்களுக்கு மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.