Dark circles eyes: ஒவ்வொரு நபருக்கும் தன்னுடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதற்காக, அடிக்கடி ‘பியூட்டி பார்லர்’ சென்று தங்கள் முகத்தை அழகுபடுத்தி கொள்வார்கள். இருப்பினும், வெயில் காலம் வந்துவிட்டாலே முகத்தின் அழகை கெடுப்பது போல், கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படும். அப்படியாக, கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான இயற்கை தீர்வுகள் என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
கண்களில் கருவளையம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
கண்களில் கருவளையம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இன்றைய இன்டர்நெட் காலத்தில் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, செல்போன் பயன்பாடு அதிகரிப்பு, தூக்கமின்மை, மன அழுத்தம், மேற்கத்திய உணவு முறை, ஒவ்வாமை போன்றவை கண்களில் கருவளையம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
கற்றாழை ஜெல்:
கண்களில் கருவளையம் ஏற்படுவதை தடுப்பதற்கு கற்றாழை ஜெல் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை கண்களை சுற்றி தடவ வேண்டும். மேலும், இது தோல் நிறமியைத் தடுக்க உதவுகிறது. சரும அழகை பராமரிக்கிறது.
வெள்ளரிக்காய்:
இந்த வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் பயன்பாடு மிகவும் அதிகரித்து காணப்படும். எனவே, இந்த வெள்ளரிக்காயினை துண்டு துண்டாக வெட்டி கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கும் இடத்தில், 5 நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் வரை வைத்தால், அந்த இடத்தில் அதிகப்படியாக குளிர்ச்சி ஏற்படும்.
தக்காளி:
தக்காளி கருவளையம் ஏற்படுவதை தடுக்கும். இதில் பீட்டா கரோட்டின் போன்ற கெமிக்கல் உள்ளது. இது தோல் திசுக்களுக்கு நல்ல பலன் அளிக்கிறது. எனவே வாரத்தில் இரண்டு முறை தக்காளி சாற்றினை கண்களுக்கு கீழே தடவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:
கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து கண்களில் தடவிக் கொள்ள வேண்டும். இது சருமத்திற்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்கும். மேலும், சருமத்தின் வீக்கத்தைக் குறைத்து பொலிவு பெற செய்யும்.
உருளைக்கிழங்கு சாறு:
கண்களில் கருவளையம் உள்ள இடத்தில் உருளைக்கிழங்கு சாறு தடவினால், கருவளையம் படிப்படியாக குறையும். மேலும், கண்களை சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாப்பாக வைக்கும்.
ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தின் சாற்றினை கண்களில் கருவளையம் உள்ள இடத்தில் தடவினால் போதும், நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். மேலும், இது சருமத்திற்கு சிறந்த ஊட்டமளிக்கிறது.