Sharing is caring!

Dhanam palangal in Tamil: திருமணத்திற்கு பிறகு சுமங்கலி பெண்கள் கைகளில், சில பொருட்களை தானம் பெறுவது மற்றும் தானம் கொடுப்பது கூடாது என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது. நம்முடைய கலாசாரத்தில் தானம் பெறுவதும், கொடுப்பதும் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. தானம் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் விலகும். அதிலும், மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் சுமங்கலி பெண்கள் கைகளால் தானம் கொடுக்கும் போது, வீட்டில் செல்வமும் , வளமும் பெருகும் என்பது நம்பிக்கை. அப்படி பெண்கள் சில பொருட்களை தங்கள் கைகளால் கொடுத்தால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். அதுவே, சில பொருட்களை சுமங்கலி பெண்கள் கைகளால் தானம் கொடுக்கவும், பெறவும் கூடாது என்று சொல்லப்படுகிறது.

ஆன்மீக ரீதியாக, அவை என்னென்னெ பொருட்கள் என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.

முதலாவதாக முகம் பார்க்கும் கண்ணாடி, சுமங்கலி பெண்கள் கைகளால் யாருக்கும் தானம் கொடுக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், முகம் பார்க்கும் கண்ணாடி மகாலட்சுமியின் வசிப்பிடம் என்பதால், பிறரிடம் கொடுக்கும் போது நமக்கு தரித்திரம் வந்து சேருமாம். அதேபோல், கண்ணாடி வீட்டில் உடைவது அபச குணமாக கருதப்படுகிறது.

Credit: pexels.com/

இரண்டாவதாக, சுமங்கலி பெண்கள் கத்தி, கத்திரிக்கோல், ஊசி போன்ற கூர்மையான பொருட்களை யாருக்கும் தானமாக வழங்க வேண்டாம். இவை வீட்டில் தரித்திரத்தை உண்டு பண்ணும். அதேபோன்று, சுமங்கலி பெண்கள் துடைப்பத்தை யாருக்கும் தானமாக வழங்க கூடாது. இவை உங்களுக்கு பண பிரச்சனையை ஏற்படுத்தும். இவை வீட்டின் செல்வத்தை பிறருக்கு கொடுப்பதற்கு சமம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மூன்றாவது குத்து விளக்கு, இன்றைய கால கட்டத்தில் கல்யாண வீடுகளில் பரிசு பொருளாக குத்து விளக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், குத்து விளக்கு சுமங்கலி பெண்கள் பிறருக்கு தானம் கொடுக்க கூடாது. இதனால் மகாலட்சுமி அருள் உங்களுக்கு பரி பூரணமாக கிடைக்காமல் போகும்.

Credit: indiamart.com/

நான்காவதாக சுமங்கலி பெண்கள் ‘குங்குமச்சிமிழை’ யாருக்கும் தானம் கொடுக்க கூடாது. இவை, உங்களுக்கு தீராத ஆபத்தை உண்டு பண்ணும். வேண்டுமென்றால், நாம் அதற்கு பதிலாக குங்குமம் கொடுக்கலாம். அதேபோல், கிழிந்த துணிகளை தானம் வழங்க கூடாது. இதனால், உங்களுக்கு துரதிர்ஷ்டம் வந்து சேரும். மேலும், உடைந்த பொருட்களை தானம் வழங்க கூடாது.

(Visited 54 times, 1 visits today)

Sharing is caring!