Vastu shastra tips in tamil: நம்முடைய வீடுகளில் பூஜை அறை வாஸ்து பார்த்து கட்டப்பட்டு இருக்கும். அவற்றிற்கு அவ்வப்போது, பூஜை பரிகாரம் செய்வது வழக்கம். அப்படி நாம் என்னதான் பார்த்து பார்த்து பூஜை உள்ளிட்ட பரிகாரங்களை செய்தாலும், சில நேரம் பலன் என்பது நமக்கு கிடைக்காமல் போகும். இதற்கு முக்கிய காரணமாக பூஜை அறையில் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் இருக்கும். இதனால், நாம் மிகுந்த மன உளைச்சலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் கடவுள் நமக்கு தண்டனை கொடுப்பாரா என்கின்ற அச்சமும் நமக்கு இருக்கும். எனவே, இதுபோன்ற தவறுகளை தவிர்த்து குடும்பத்தில் சந்தோஷம் பெருக, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பாருங்கள். ஆன்மீகம் சார்ந்து பூஜை அறையில் நாம் செய்யக்கூடாத தவறுகள் என்னென்னெ என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப்போகிறோம்.
மேலும் படிக்க, கல் உப்பு பரிகாரம்…நிச்சயமாகவே நல்ல பலன் உண்டு!
சீரியல் பல்புகள்:
நம்முடைய பூஜை அறையானது அழகாக ஜொலிப்பதற்கு சிலரது வீடுகளில் சீரியல் செட் லைட்டுகள் போட்டு வைத்திருப்பார்கள். திருவிழா போன்ற விசேஷ நாட்களில் இதுபோன்ற சீரியல் லைட்டுகள் போட்டு வைத்திருப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால், அன்றாடம் வீடுகளில் இதுபோன்ற சீரியல் லைட்டுகள் அவசியமில்லாத ஒன்றாகும். ஏனெனில், நம்முடைய பூஜை அறைக்கு விளக்கு ஒளிதான் அழகை கொடுக்கும். வீட்டில் லட்சுமி கடாஷத்தை கொண்டுவந்து சேர்க்கும். மேலும், இது கோவில் கருவறையில் தெய்வத்திற்கு ஏற்றுவதற்கு ஒப்பானது.
நெய்வேத்தியம்:
இறைவனுக்கு நெய்வேத்தியம் வைக்கும் போது, பாத்திரம் தழும்ப வைக்க வேண்டும். குறைவாக வைத்து இறைவனுக்கு படைப்பது முற்றிலும் தவறான விஷயமாகும். இதனால், இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்காமல் போகும்.
சுத்தமாக இருக்க வேண்டும்:
பூஜை அறை எப்போதும் துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்யும் போது, அவற்றின் குப்பைகளை வீட்டின் அருகில் இருக்கும் ஆற்றில் அல்லது குளத்தில் போடுவது மிகவும் நல்லது.
அதேபோன்று, கைதவறி பூஜை அறையில் இருக்கும் சாமி படம் உடைந்து போய்விட்டால் அபசகுணம் என்று நினைத்து கொள்ளாமல், உங்கள் குல தெய்வத்தை மனதார நினைத்து கொண்டு, ஒரு காகிதத்தில் சுற்றி கீழே போட்டுவிட வேண்டும்.
நம்முடைய வீட்டின் பூஜை அறையின் விளக்கு தானாக அணைந்து போய் விடாமல், பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை, தவறுதலாக நடந்து விட்டால் இறைவனிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
பூஜை செய்யும் முறை:
பூஜை செய்யும் போது, பழைய கிழிஞ்ச துணி அல்லது நியூஸ் பேப்பர் போட்டு பூஜை செய்யக்கூடாது. அதற்கு பதிலாக தரையில் சுத்தமான பாய் அல்லது மனப்பலகை போட்டு அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.