Sharing is caring!

Drumstick leaves: முருங்கையில் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதன் தலை முதல் நுனி வரை அத்தனையும் பலன் தரக்கூடியது. முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, நீங்கள் தினமும் முருங்கை கீரை சாப்பிடுவதால் என்னென்னெ நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

முருங்கையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதன் மூலம், உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முருங்கைக்காய் உதவுகிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதற்கு, முருங்கை இலை உதவுகிறது.

முருங்கைக்காய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

முருங்கைக்காய் சாப்பிடும் நபர்களுக்கு தைராய்டு ஹார்மோன் அளவு அதிகரிக்காது. முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இவை வலி உள்ள இடத்தில் தடவினால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

முருங்கை இலையின் பொடி மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் மிகவும் பெரிய அளவில் உதவுகிறது.

முருங்கை பொடி எலும்புகளை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

முருங்கை கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், மலசிக்கல், பித்தம், மயக்கம் போன்றவை குணமாகும்.

உடலில் சூடு அதிகம் இருப்பவர்களுக்கு வாரத்தில் இரண்டு முறை முருங்கை கீரை சாப்பிடுவது நல்லது.

(Visited 29 times, 1 visits today)

Sharing is caring!