Sharing is caring!

Sani peyarchi 2023 Palangal: ஜோதிடத்தின் பார்வையில், கர்மகாரகன் என்றழைக்கப்படும் சனி பகவான் கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகவும். ஒருவரின் நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை வழங்கும் சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதற்கு சுமார் 2 1\2 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும். அதன்படி, ஜூன் 17 ம் தேதி, 2023 சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதையடுத்து, சனி பகவான் தனது சொந்த ராசியில் சுமார் 6 மாதங்களுக்கு வக்ர நிலையில் தான் இருப்பார்.

குருவின் மாற்றம் 2023..இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி கடலில் நீந்தும் 5 ராசிகள்..!

ஒரு கிரகம் பின்னோக்கி செல்லும் போதெல்லாம், அதன் விளைவு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமாகவும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாதகமாகவும் இருக்கும். அதன்படி, மேஷம், ரிஷபம், துலாம், கன்னி ஆகிய ராசிகளுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி லாபகரமாக அமையவிருக்கிறது. இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அனைத்து தொழில்களும் லாபமானதாக அமையும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அப்படியாக, சனியின் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களை அனுபவிக்க காத்திருக்கும் ராசிகள் யார் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

Sukran Peyarchi 2023: சுக்கிரன் இடப்பெயர்ச்சி… ஜூலை 7ம் தேதி வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன்..!

மேஷம்:

மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். திடீர் பண வரவு உண்டாகும். நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் யோகம் கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் பெயர்ச்சியால் தாய் வழி உறவு ஆதரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. புதிய வீடு, வாகனம், சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். உங்களுக்கு நிதி நிலை வலுவாக இருக்கும்.

Sukran Peyarchi 2023: சுக்கிரன் இடப்பெயர்ச்சி… ஜூலை 7ம் தேதி வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன்..!

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் பெயர்ச்சி இரட்டிப்பு பலன்களை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். காதல் உறவு கைகூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மன அமைதி கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் பெயர்ச்சி, சுப பலன்களை கொடுக்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.தொழிலில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசு வேலை கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். திருமண உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.

குருவின் மாற்றம் 2023..இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி கடலில் நீந்தும் 5 ராசிகள்..!

(Visited 138 times, 1 visits today)

Sharing is caring!