Black pepper benefits: நம்முடைய வீட்டின் சமையல் அறையில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் பொருட்களில் ஒன்று கருப்பு மிளகு ஆகும். உணவுகளின் சுவை கூட்டுவதுடன், ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது. கருப்பு மிளகில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், பல்வேறு நோய்களில் இருந்து நன்மை பாதுகாக்கிறது.
கருப்பு மிளகு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
கருப்பு மிளகில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில், கருப்பு மிளகு கஷாயம் குடித்து வருவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் நாம் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ முடியும், என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் கருப்பு மிளகு:
கருப்பு மிளகில், சளி காய்ச்சல் போன்ற நோய் கிருமிகளை குணப்படுத்தும் தன்மை இருக்கிறது. கருப்பு மிளகினை எடுத்து தட்டி கஷாயம் போட்டு குடித்தால் போதும், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், இருமல் போன்றவை நீங்கி உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:
கருப்பு மிளகு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், உலர் திராட்சையுடன், கருப்பு மிளகு சேர்ந்து சாப்பிடுவது மிகச்சிறந்த நிவாரணம் தரும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்:
நீரிழிவு நோயினால் அவதிப்படுவோர் தினமும் 1 டீஸ்புன் கருப்பு மிளகு சாப்பிடுவது நன்மை பயக்கும். கருப்பு மிளகில் தேநீர், டீ வைத்து குடிப்பது நன்மை தரும். இதனால் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இதனால் சர்க்கரை நோய் வராமல் இருக்கும்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்:
உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதில் கருப்பு மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், ஒருவரின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
ஒவ்வாமை பிரச்சனை:
ஒவ்வாமை, புற்றுநோய், இதய நோய், மூட்டுவலி போன்ற நாள்பட்ட நோய்களை எதிர்த்து போராடும் குணம் கருப்பு மிளகில் இருக்கிறது.
செரிமானம் மேம்படும்:
செரிமானம், அஜீரணம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு, , கருப்பு மிளகு நீர் சிறந்த நிவாரணம் அளிக்கும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.மேலும், சருமத்தை அதிக ஈரப்பதத்துடன் வைத்திருப்பதில் கருப்பு மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது.