![](https://lifestyletamil.com/wp-content/uploads/2023/04/hair-fall3.jpg)
Hair Fall Control Pack: இன்றைய நவீன காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை பெரும் மன உளைச்சலை தருகின்றது. அதற்கு, இன்றைய மேற்கத்திய உணவு முறை மற்றும் நம்முடைய வாழ்கை முறை மாற்றம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நடைமுறை வாழ்வில் எப்போதும் முடி உதிர்தலை தவிர்ப்பதில் பெண்களை விட ஆண்களுக்குதான் அக்கறை அதிகம். ஏனெனில், ஆண்களின் வழுக்கை பிரச்சனை அவர்களின் திருமண வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு செல்கிறது. இன்னும் சிலருக்கு திருமணம் தடை ஆவதற்குக் கூட முடி உதிர்வு, மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
![](https://lifestyletamil.com/wp-content/uploads/2023/04/hair-fall4.jpg)
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் பேக்:
எனவே, ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, எலி வால் போல் சுருண்டு இருக்கும் தங்கள் முடியை, அடர்த்தியாக வளர வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி, நாம் நீளமான, அடர்த்தியாக கூந்தலை பெற என்னதான் விதவிதமான கெமிக்கல் கலந்த பொருட்களை, கடைகளில் வாங்கி பயன்படுத்தி பார்த்தாலும், பலன் கிடைத்த மாதிரி இருக்காது. கடைசியில் உங்கள் காசு தான் வீணாகும். இன்னும் சிலருக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும். எனவே, இது போன்ற பிரச்சனைகளுக்கு எளிய தீர்வாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த ஹேர் பேக் பயன்படுத்தி பாருங்கள்.
![](https://lifestyletamil.com/wp-content/uploads/2023/04/hair-fall1.jpg)
இந்த ஹேர் பேக் கை தொடர்ந்து இரண்டு வாரம் பயன்படுத்தி பார்த்தால் போதும், உங்களின் முடி நெடு நெடுன்னு வளரும்.
ஹேர் பேக் தயாரிக்கும் முறை:
இந்த ஹேர் பேக் தயாரிக்க, தேங்காய் பால், கற்றாழை, முட்டை மற்றும் காய்ச்சிய பால் போன்றவற்றை முடிக்கு ஏற்ற மாதிரி தலா 1 டீஸ்புன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு தேவையான ஹேர் பேக் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சேர்த்திருக்கும் எல்லா பொருட்களுமே முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கொடுப்பவை ஆகும். இதனை நீங்கள் குளிப்பதற்கு முன்னாள் தேய்த்து குளித்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
![](https://lifestyletamil.com/wp-content/uploads/2023/04/hair-fall6.jpg)
பயன்படுத்தும் முறை:
முதலில், நீங்கள் குளிப்பதற்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்பு இந்த ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இதனை முடியின் நுனி வரை அப்ளை செய்து கொள்ள வேண்டும். பிறகு, தலையை தேய்த்து நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஷாம்பு போட்டு தலையை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். ஏனெனில், நீங்கள் கலந்திருக்கும் முட்டையில் வரும் வாசத்தை இது தடுக்கும். எனவே, ஒருமுறைக்கு இரண்டு முறை தலையில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
![](https://lifestyletamil.com/wp-content/uploads/2023/04/hair-fall5.jpg)
தொடர்ச்சியாக, இரண்டு மூன்று மாதம் இந்த ஹேர் பேக் டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள். முடி நல்ல அடர்த்தியாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். மேலும், டிரையாக இருக்கக்கூடிய உங்கள் முடி பியூட்டி பார்லர் போகாமலே சில்க்கியாக மாறிவிடும். குறைந்த செலவில் முடி அடர்த்தியாக வளர இந்த டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள் . நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.