Useful Kitchen Tips in Tamil: இல்லத்தரசிகளின் பெரும்பாலான நேரம் சமையல் அறையில் தான் செலவழிகிறது. பொதுவாக, நாம் சமையல் அறையில் சில விஷயங்களை மிகவும் சிரமப்பட்டு செய்து கொண்டிருப்போம். அவற்றை எளிமையாக செய்து முடிக்க சில குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால், உங்களின் பொன்னான நேரம் மிச்சமாகும். அதுமட்டுமின்றி, சமையல் அறையின் அடுத்த ராணி ஆக விருப்பமுள்ள இல்லத்தரசிகளுக்கு, நிச்சயம் இந்த குறிப்பு உதவியாக இருக்கும்.
டிப்ஸ்1:
கோதுமை மாவு, அரிசி மாவு போன்றவற்றை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளும் போது, அதில் வண்டு வராமல், இருக்க நான்கைந்து பிரியாணி இலைகளை அதில் போட்டு வைக்க வேண்டும். இதனால் மாவு 6 மாதம் ஆனாலும் எப்போதும் பிரஷ்ஷாக இருக்கும்.
டிப்ஸ் 2:
பூண்டு தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். இருப்பினும், பூண்டு தோல் உரிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இதற்கான, நீங்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பூண்டினை மொத்தமாக வாங்கி அதனை கடாயில் போட்டு ஒருமுறை வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு, சூடு ஆறியதும் கைகளால் கசக்கினால் போதும் பூண்டு தோல் எளிதில் பிரிந்து வந்துவிடும். இதனை எடுத்து ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிப்ஸ் 3:
வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை அதிகம் இருக்கும் வீடுகளில் கேர் பின் (ஊக்கு) எடுத்து, அதில் மூன்று முதல் 5 உரித்த பூண்டினை குத்திக் கொள்ளுங்கள். பிறகு அதனை எடுத்து சமையல் அறையின் எதோ ஒரு மூலையில் தொங்க விட்டு கொள்ளுங்கள். இதன் வாசம் தாங்க முடியாமல் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை தலை தெறிக்க ஓடிவிடும்.
டிப்ஸ் 4:
அப்பளம் பதத்து போகாமல் இருக்க அதனை வாங்கி காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்பளம் நீண்ட நாள் நமத்து போகாமல் இருக்க டப்பாவின் கீழே கல் உப்பினை போட்டு வையுங்கள்.
டிப்ஸ் 5:
இட்லி, தோசை மாவு நீண்ட நாள் புளித்த போகாமல் இருக்க, மாவு அரைக்கும் போது ஐஸ் வாட்டர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். கூடவே, பிஞ்சு வெண்டைக்காய் ஒன்றையும் சேர்த்து அரைத்து பாருங்கள். மாவு புளிக்காமலும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
டிப்ஸ் 6:
உங்கள் அடுப்பு மேடையை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும், எண்ணெய் பிசுக்கு போகாமல் இருந்தால், சமையல் மேடையில் மேலே அரிசி மாவு, கோதுமை மாவு போன்றவற்றை தூவி 10 நிமிடங்கள் கழித்து காட்டன் துணியால் அழுத்தி துடைத்து எடுங்கள். பிறகு சோப்பு தண்ணீர் மூலம் அலசி விடுங்கள். இதனால் உங்கள் சமையம் மேடை, பார்ப்பதற்கு புதியது போல், எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
டிப்ஸ் 7:
வீடுகளில் எறும்பு தொல்லை அதிகமாக இருந்தால், மூன்று முதல் ஐந்து கிராம்பு மற்றும் பட்டை எடுத்து வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை எறும்பு உலா வரும் இடங்களில் தூவி விட்டால் போதும், இதன் வாசத்திற்கு எறும்புகள் எட்டிக் கூட பார்க்காது.