Sani Peyarchi 2023: ஜோதிடத்தின் பார்வையில், நீதியின் கடவுளான சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2023 ஜனவரி 17 அன்று தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்துள்ளார். சனி பகவான் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப நல்ல மற்றும் தீய பலன்கள் தருகிறார். சனியில் வக்கிர பார்வை ஒருவருக்கு இருந்தால், அவர்கள் வாழ்வில் ஏராளமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். இருப்பினும், சனி பகவான் தனது அருள் மழையை பொழிய துவங்கிவிட்டால், அதனை யாராலும் தடுக்க முடியாது. அப்படியாக, சனியின் பத்தாம் இடம் பார்வையால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நல்ல நேரம் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, அவர்களுக்கு வாழ்வில் செல்வ, செழிப்பும் முன்னேற்றமும் உண்டாகும். அந்த அதிர்ஷ்டம் நிறைந்த 3 ராசிகள் யார் என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப்போகிறோம்.
ரிஷபம்:
ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியில் பார்வையால் பணம் குவிய வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வேண்டிய புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் வெற்றி பெறும். தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். நீண்ட நாட்கள் தடைபட்ட காரியம் கைகூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவு பெறும்.
சிம்மம்:
வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் வெற்றி நிச்சயம்.கல்வி தொடர்பான செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழிலில் மதிப்பும், மரியாதையும் உயரும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.வீண் செலவுகள் தவிர்க்கப்படும்.
கும்பம்:
குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். திருமணம் கைகூடும்.வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில், புதிய வேலை கிடைக்கும்.