Sharing is caring!

Breast Feeding Tips: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது, ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது குழந்தையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு உண்டாகும், நீரழிவு நோய், மார்பு கருப்பை புற்றுநோய் ஆகியவை வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது. எனவே, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

Pregnancy Parenting: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்லலாமா..? பிரபல மருத்துவர் விளக்கம்..!

ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு, கலப்பு உணவு வயிற்றுப்போக்கு மற்றும் பிற தொற்று நோய்க்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். மற்றும் தாய்ப்பால் பருகும் அளவும் குறைந்துவிடும்.

செயற்கை அடிப்படையிலான பால் மற்றும் அதன் மாற்று வகைகள் தாய்ப்பாலுக்கு மாற்றாக இருக்காது. தாய்ப்பாலின் அனைத்து பண்புகளையும் அவை கொண்டிருப்பதில்லை. அவை மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு மார்பகங்களை தண்ணீரில் சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.

ஒரு பக்கமாக தாய்ப்பால் புகட்டுவதை தடுக்க வேண்டும். ஒருபக்க மார்பகத்தில் முழுவதுமாக புகட்டி, பின்னர் இரண்டாவது மார்க்கத்திலும் புகட்ட வேண்டும்.

நோய்கள் உண்டாவதை தடுக்க உங்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்துங்கள்.

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும், பின்னும் நிறைய திரவங்களை குடிக்கவும்.

நீங்கள் குளிக்கும் போது உங்கள் மார்புகளை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும்.

குழந்தைகள் விரும்பும் நேரம் தேவைக்கு ஏற்ப தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு குறையான தடவை நீண்ட நேரம் பால் குடிக்க துவங்குகிறது.

பாட்டில்கள், பாசிபையர்ஸ் ஆகியவை பயன்படுத்தினால் குழந்தைக்கு முலைக்காம்பு குழப்பத்தை ஏற்படுத்துவதால், அவற்றை உபயோகிக்க வேண்டாம்.

சில நேரங்களில் உங்கள் முலைகளில் இருந்து எதிர்பாராத விதமாக தாய்ப்பால் கசியக் கூடும். மார்பக பட்டைகளை அணிவதால் அவற்றை உறிஞ்சி உங்கள் துணிகளை ஈரமாக்குவதை தடுக்கும். எந்த ஒரு நோய்த் தொற்றையும் தடுக்க இப்பட்டைகளை அடிக்கடி மாற்றுங்கள். தாய்ப்பாலை வெளியே பிழிந்து விடுவது அல்லது உடனே தாய்ப்பால் புகட்டுவது இதை தடுக்க உதவுகிறது.

மேலும் படிக்க…Kissing baby on lips: குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது சரியா..? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..!

(Visited 38 times, 1 visits today)

Sharing is caring!