
Kissing baby on lips: முத்தங்கள் பலவிதம் இருக்கிறது. காதலன் தனது ஆசை காதலிக்கு கொடுக்கும் காமம் கலந்த முத்தம். கணவன் – மனைவிக்கு கொடுக்கும் அன்பு முத்தம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் முத்தம். நண்பர்கள் இருவருக்கும் இடையே பரிமாறும் முத்தம். தாத்தா, பாட்டிகள் தனது பேர குழந்தைக்கு கொடுக்கும் முத்தம், என ஆசை முத்தம் நீண்டு கொண்டே போகும். இதில் நாம் பிறருக்கு முத்தம் கொடுக்கும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றம் காரணமாக முத்தம் உயிர் பெறுகிறது.

பொதுவாக பலர் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி, லிப்லாக் முத்தம் குழந்தைகளுக்கு பெற்றோர் உள்ளிட்ட யாருமே கொடுக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர். ஏனெனில், குழந்தைகளுக்கு நம்மை போல் நோய் எதிர்ப்பு முழுமையாக செயல்படாது. நீங்கள் உதட்டில் முத்தம் கொடுக்கும் போது உங்களது வாயின் மூலம் குழந்தைகளுக்கு கிருமிகள் பரவலாம். அது அவர்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும்.
பால் பொருட்கள்:

வளரும் குழந்தைகளுக்கு பால் தொடர்பான தயிர், சோயா, சீஸ், போன்ற பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஏராளமான சத்துக்களை அள்ளிக் கொடுக்கிறது. இவை எலும்புகள், பற்கள், நகங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவைகள் உணவு ஒவ்வாமை பொருட்கள் ஆகும். ஒருவரின் முத்தம், பிறந்த குழந்தைக்கு உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
குழந்தைகளை உதட்டில் முத்தமிடுவதால் வரும் மிகக் கடுமையான ஆபத்துகளில் ஒன்று, காய்ச்சல், கொப்புளங்கள், புண்கள், குளிர் போன்றவை ஆகும்.
மேலும் படிக்க…Lips Dry: வெயிலில் உதட்டினை கருமை, வெடிப்பு இல்லாமல் பாதுகாக்க…நச்சு டிப்ஸ் இருக்கு..!