Sharing is caring!

மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். ஆனால், கர்ப்ப காலத்தில் ரத்த போக்கு ஏற்படுவது சிக்கலான ஒன்றாகும். ஆம், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ..? என்று நினைத்து பெரும்பாலான பெண்கள் அச்சத்தில் இருப்பார்கள். இருப்பினும், சில நேரம் கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு இயல்பான ஒன்றாகும். எனவே, கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு கருக்கலைதலின் அறிகுறியா..? என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

Pregnancy Parenting: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்லலாமா..? பிரபல மருத்துவர் விளக்கம்..!

கர்ப்ப காலத்தில் இரத்த போக்கு மற்றும் கசிவு:

இது கருவுற்ற நாள் முதல், குழந்தை பிறக்கும் நாள் வரை எப்போது வேண்டுமானாலும், ஏற்படலாம். சிறிதளவு இரத்தக்கசிவு, கர்ப்பகாலத்தில் முதல் 3 மாதங்களில் தென்படலாம்.

ஆரம்ப கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு:

கருவுற்றவுடன் சிறிது இரத்தம் கசிவது, கருவானது கர்ப்பப்பையில் பதியும் காலத்தில் சிறிது இரத்தக்கசிவு என்பது ஏற்படுகிறது. இது ஒரு தாய் தான் கருவுற்று இருப்பதை உணரும் முன்னரே ஏற்படும். இதனை மாதவிடாய் என்று ஒரு சிலர் தவறுதலாக நினைக்கலாம்.

இதனை தவிர்த்து இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்:

கரு கலைதல்
கர்ப்பபைக்கு வெளியே ஏற்படும் கர்ப்பம்.
முத்துப்பிள்ளை கர்ப்பம்.
யோனி நோய்தொற்று
உடலுறவு
நஞ்சுக்கொடி கருப்பையில் கீழே பதிந்திருந்தல்.
நஞ்சுக்கொடி பிரசவத்திற்கு முன்னரே பிரிதல்.

கருகலைதல் மற்றும் கருச்சிதைவு:

கரு முழுமையாக வளர்ச்சியடையும் முன்னரே, கர்ப்பம் வளர்ச்சியடையாமல் நிறுத்தப்படுகிறது. இதுவே, கருச்சிதைவு எனப்படுகிறது. இதற்கு நோய் தொற்று, காய்ச்சல், கருமுட்டை மற்றும் கருவுற்ற முட்டையில் ஏற்படும் குறைபாடுகள்.  கர்ப்பப்பை வாய் தளர்தல் போன்றவை ஆகும். கடுமையான அடி வயிற்று வலியுடன் யோனி வழியே இரத்தப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

கர்ப்பப்பைக்கு வெளியே கரு பதிதல்:

இந்த கர்ப்பத்தில், கருவுற்ற முட்டை, கருப்பைக்கு வெளியே உருவாகிறது. பெரும்பாலான நேரங்களில், பெலோபியன் குழாயில் இது நிகழ்கிறது. இது மீயொலி ( அல்ட்ராசவுண்ட்) சோதனை மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. கடுமையான வயிற்று வலி, வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

மோலார் கர்ப்பம்: ( முத்துப்பிள்ளை கர்ப்பம் )

கருவின் திசுக்களின் சிதைவு ஏற்பட்டால், இவ்வகை கர்ப்பம் நிகழ்கிறது. சிசு இறந்து, கரு மற்றும் நஞ்சு திசுக்கள் திராட்சை போன்று வெவ்வேறு அளவிலான இரத்தக்குமிழிகள் போன்று மாற்றப்பட்டு கருப்பை உள்ளே நிரம்பி, கருப்பை பெரிதாக தென்படும். அதிகப்படியான வாந்தி, மயக்கம், இரத்த கசிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை மோலார் கர்ப்பத்தின் அறிகுறிகள் ஆகும்.

24 வாரங்களுக்கு பிறகு யோனியில் இரத்த கசிவு:

கர்ப்பத்தின் 24 வாரங்களுக்கு பிறகு, யோனியில் இருந்து இரத்தக்கசிவு போக்கு ஏற்படுதல். கர்ப்பகால சிக்கல்களில் மிகவும் முக்கியமானதாகும். இது தாய் மற்றும் சிசு நலத்தை பாதிக்கும்.

இதனை இரண்டு வகைகளில் பிரிக்கலாம்:

கருப்பையில் சாதாரண இடத்தில் பதித்துள்ள நஞ்சுக்கொடி பிரசவத்திற்கு முன்னரே பிரிதல்.

நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் கீழ் பகுதியில் பதிதல். இந்த இரண்டு வகைகளிலும், இரத்தக்கசிவு உண்டாகலாம்.

அதிகப்படியான வாந்தி:

வாந்தி எடுத்தல் பொதுவாக கர்ப்பத்தின் ஆரம்பத்தில் சுமார் 6 வாரங்களில் துவங்கி 12 வாரம் வரை இருந்து பின் குறைகிறது. இது ஹசிஜி என்னும் ஹார்மோன் அளவு உடலில் மிக அதிகமாவதால் உண்டாகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் சரியாக உணவு உட்கொள்ள முடியாமல், கடுமையான நீர் மற்றும் இரத்த இழப்பு ஏற்படுகிறது.

மேலும் படிக்க….Breast Feeding Tips: குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பத்து விஷயங்கள்..!

(Visited 145 times, 1 visits today)

Sharing is caring!