Sharing is caring!

Calcium rich Foods: எலும்புகள் வலுவாக இருக்க, நமது உடலுக்கு கால்சியம் சத்து அவசியம். ஏனெனில், எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலில் கடுமையான வலியை ஏற்படுத்தும். அதுவும், வயதாகும்போது, ​​​​எலும்புகள் தேய்மானம் அடைகின்றன. இந்த தேய்மானம் ஒரு இயற்கையான செயலாகும். இதனை முழுமையாக தடுக்க முடியாது. இருப்பினும், நமது உணவு பழக்கவழக்கம் மூலம் உடலில் கால்சியம் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில், கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நமது எலும்புகளை வலுவாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

Credit: pexels.com/

கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள்:

உடலில் கால்சியம் சத்து குறைவாக இருந்தால், முதுகுவலி, மூட்டுவலி, எலும்புகள் தேய்மானம், அஜீரண கோளாறு, பற்களில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக, ஆண்களை விட பெண்கள் தான் இந்த கால்சியம் சத்து குறைபாட்டால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சோயா:

உங்களுக்கு கால்சியம் சத்து குறைபாடு இருந்தால் சோயா சிறந்த உணவுப்பொருளாகும். சோயாவில், வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. மேலும், சோயா உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.

பால்:

Credit: pexels.com/

பால் சார்ந்த உணவு பொருட்கள் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாகும். பால், தயிர், வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற அனைத்து பொருட்களிலும் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. ஏதேனும், ஒரு வழிமுறைகளில் இவற்றை தினசரி உணவுல் சேர்ப்பதில் மூலம் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைக்கும்.

பாலுக்கு நிகரான கால்சியம் சத்து நிறைந்த உணவு:

பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களுக்கு பாலுக்கு நிகரான கால்சியம் சத்து நிறைந்த சோயா பால் எடுத்துக் கொள்ளலாம். சைவ பிரியர்கள், கால்சியம் சத்து நிறைந்த பாதாம் பால் அருந்தலாம். இதில் அதிக அளவில் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. குறிப்பாக, இவை நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலன் அளிக்கும்.

Credit: pexels.com/

கொழுப்பு நிறைந்த மீன்:

சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் கால்சியம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பச்சை காய்கறிகள்:

Credit: pexels.com/

பச்சை காய்கறிகளில், வைட்டமின் , வைட்டமின் மற்றும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இவை எலும்புகள், தசைகள், மூட்டுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

முட்டை:

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் இருக்கும் புரதம், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

பருப்பு வகைகள்:

பால் சார்ந்த உணவு பொருட்கள் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாகும்.

பீன்ஸ்,பாசி பருப்பு, பட்டாணி, மசூர் தால் போன்ற பருப்புகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கின்றன. இவை எலும்புகளை வலுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், நமது உடலுக்கு தேவையான செரிமான அமைப்பினை சீராக்க உதவுகிறது. இதனை தவிர்த்து, சிவப்பு தினை, சியா விதைகள், பாப்பி விதைகள் போன்றவற்றில் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

(Visited 30 times, 1 visits today)

Sharing is caring!