Sharing is caring!

ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் தனித்துவமான அறிகுறிகள் தோன்றும்.  ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு தாயின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாறுபாடுகள் மற்றும் கருப்பையில் வளரும் குழந்தையின் தேவைகள் ஆகியவற்றை பொறுத்து, கர்ப்பத்தின் அறிகுறிகள் ஒரு தாயிடம் இருந்து மற்றுமொரு தாய்க்கு மாறுபடும். சில கர்ப்பிணி பெண்கள் மாதவிடாய் நின்று போவதை தவிர வேறு எந்த அறிகுறிகளை பார்த்தாலும், அனுபவிக்க மாட்டார்கள்.

சிசுவின் பல்வேறு உறுப்புகள் உண்டாகுதல் மற்றும் சிசுவின் வளர்ச்சியும் இந்த முதல் மூன்று மாதத்தில் நிகழ்கிறது. ஆதலால் இந்த காலகட்டம் தாய்க்கும், சேய்க்கும் மிகவும் முக்கியமான காலகட்டம் ஆகும்.

மேலும் படிக்க..Pregnancy Piles: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான 5 முக்கிய காரணங்கள்..!

கர்ப்பிணி பெண்ணின் அறிகுறிகள்:

மாதவிடாய் தேதி தள்ளிபோகுதல்.

குமட்டல், வாந்தி, தலை சுற்றல். சோர்வு.

வலி மற்றும் வீங்கிய மார்பகங்கள்.

சில உணவுகளை விரும்புதல், சில உணவுகளை வெறுத்தல்.

மனநிலை மாறுபாடு. எடை அதிகரிப்பு அல்லது குறைதல்.

நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணம்.

அடிக்கடி சீறுநீர் வருவது.

மார்பகத்தில் வலி.

இந்த அறிகுறிகள் எல்லாம் உடலில் HCG ஹார்மோன் மாற்றம் காரணமாக, கருத்தரித்த முதல் சில வாரங்களில் ஏற்படலாம்.

குழந்தையின் வளர்ச்சி:

குழந்தையின் அனைத்து முக்கிய உறுப்புகளும் உருவாகி வருவதால், முதல் 12 வாரங்கள் ஒரு முக்கியமான காலகட்டமாகும்.

அனைத்து முக்கிய உறுப்புகளின் உருவாக்கம், கர்ப்பத்தின் முதல் மாதத்தில் நடைபெறுகிறது.

இருதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் ஆகியவை வேகமாக உருவாகத் துவங்குகிறது.

தலை, கழுத்து, முக எலும்புகள், கைகள் மற்றும் கால்கள் உருவாகின்றன.

தோராயமாக அளவு -3 அங்குலம். எடை -சுமார் 30 கிராம் வரை இருக்கும்.

மேலும் படிக்க..Pregnancy Tips: கர்ப்ப காலத்தில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவது, எவ்வளவு பாதிப்பு தெரியுமா..?

செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை:

தினமும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களுடன்ஆரோக்கியமான உணவை தொடர்ந்து சாப்பிடுங்கள். மேலும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்களுக்கு உரிய எளிமையான பயிற்சிகளில் சேர்ந்து, கற்பிக்கும் பயிற்சிகளை செய்யுங்கள். இவை உங்களுக்கு பிரசவ காலத்தில் உதவியாக இருக்கும். வேலை செய்யும் போது, அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு உதவியாக, உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு உறுப்பினர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.

போலிக் அமில மாத்திரைகள் மற்றும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேதிகளை நினைவில் வைத்துக் கொண்டு, தவறாமல் சோதனைக்கு செல்லுங்கள். இதுதவிர ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மேலும் படிக்க….Pregnancy Parenting: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்லலாமா..? பிரபல மருத்துவர் விளக்கம்..!

(Visited 24 times, 1 visits today)

Sharing is caring!