Infertility Problem: தாய்மை என்பது ஒரு வரமாகும். அந்த பாக்கியம் இன்றைய காலத்தில் எல்லோருக்கும், அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவது கிடையாது. இதற்கு நம்முடைய வாழ்கை முறை மாற்றமும், உணவு பழக்கவழக்கமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, பெற்றோராக முயற்சிக்கும் ஒவ்வொரு தம்பதியிக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்.
கருவுறாமை என்றால் என்ன..?
திருமணம் முடிந்த 12 மாதங்கள் உடலுறவிற்கு பிறகு கர்ப்பம் தரிக்கவில்லை என்பது கருவுறாமை ஆகும். இது இரு வகைப்படும். இந்த தம்பதியினர் இதுவரை ஒருமுறை கூட கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் அது முதன்மை கருவுறாமை எனப்படும். தம்பதியினருக்கு இதற்கு முன்பு கருக்கலைப்பு நிகழ்ந்திருந்தால், இது இரண்டாம் நிலை கருவுறாமை ஆகும். எனவே, இந்த தம்பதியினர் உடனடியாக ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
கருவுறாமைக்கு ஆண்களின் பங்கு:
இன்றைய நவீன காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. கருவுறாமைக்கு கணவன் மற்றும் மனைவியின் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண் காரணிகள் சுமார் 20% முதல் 30% வரை காரணமாகலாம். ஆண்களுக்கு, விந்துக்கள் உற்பத்தியாகும் உறுப்பு மற்றும் உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனைகள் கருவுறாமைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
கருவுறாமைக்கு பெண்களின் பங்கு:
பெண்களுக்கு சினைப்பை, கர்ப்பப்பை, இவை இரண்டையும் இணைக்கும் குழாய்களில் பிரச்சனைகள் மற்றும் கரு முட்டை வெளியேறுவதில் சிக்கல்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியவை கருவுறாமைக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகள், ஹார்மோன்கள் சுரத்ததில் அதிகம் அல்லது குறைபாடுகள், நோய் தொற்றுகள், மது அருந்துதல், குறைந்த எடை, அதிக எடை, மன அழுத்தம், புகை பிடித்தல், சட்ட விரோதமான மருந்துகளை உபயோகித்தல் ஆகியவை முக்கிய காரணம் ஆகும். இதனால் இயற்கை முறையில் கருவுறுதல் நிகழாதலால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கிறார்கள்.
பொது உடல் பரிசோதனை அவசியம்:
கணவன், மனைவி ஆகியோரின் உடல்நிலை பற்றிய விவரங்கள், உடல் நிலை பரிசோதனை, இரத்த பரிசோதனை, மீயொலி பரிசோதனை போன்றவற்றை ஒருவர் மேற்கொள்ளலாம்.
மலட்டுத்தன்மை சிகிக்சை முறைகள்:
கணவனின் வயது, மனைவியின் வயது தனிப்பட்ட தேர்வு முறைகள், அறுவை சிகிக்சை முறைகள், வாழ்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ காரணிகளை கண்டறிந்து அதற்கு ஏற்ற முறையில் சிகிக்சை அளிக்க வேண்டும்.
தடுப்பு நடவடிக்கைகள்:
கருவுறாமைக்கு அனைத்து காரணங்களையும் தடுக்க முடியாது. உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தல். ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல், முறையான உடற்பயிற்சி, சரியான நேரம் தூக்கம், புகை பிடித்தலையும் போதைப்பொருட்களையும் தவிர்த்தல், வயது கடத்தாமல் கர்ப்பம் தரிக்க திட்டமிடுதல் ஆகியவை உங்கள் கர்ப்ப வாய்ப்புகளை மேம்படுத்த உதவும்.