Relationship Tips: திருமண உறவில் புரிதல், நம்பிக்கை, அன்பு, பொறுமை, விட்டுக் கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்றாகும். இவை இல்லையென்றால், வாழ்வில் இல்லறம் சிறக்காது. உறவில் சிக்கல் ஏற்படும். இதனால், உங்கள் துணை வேறொருவரின் வசீகரத்தால் ஈர்க்கப்படலாம். பிறருடன் உறவில் இருப்பது, உங்கள் துணைக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். அப்படி, உங்கள் துணை வேறொரு நபருடன் கள்ள உறவில் இருக்கும் போது, நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்பதை பற்றித் தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப் போகிறோம்.
உடலுறவில் உங்கள் துணைக்கு திருப்தி இல்லனா..? இப்படித்தான் இருப்பார்களாம்..!
ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள்:
உங்கள் துணை எதனால் உங்களை விட்டு விலகினார் என்பதை பற்றி ஆலோசனை மேற்கொள்ளவும். உங்கள் துணைக்கு பாலியல் வாழ்வில் திருப்தி இல்லையா..? என்பது போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளவும். சில நேரம் இருவரின் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
படுக்கையில் அந்த விஷயத்தில் இருமடங்கு இன்பம் பெற..உங்கள் துணையின் காதில் சொல்ல வேண்டியவை..!!
பழிவாங்கும் எண்ணம் வேண்டாம்:
உங்கள் துணை உங்களை ஏமாற்றி கள்ள உறவில் ஈடுபட்டால், அவரை பழிவாங்கும் அளவுக்கு தாழ்ந்து போய் விடாதீர்கள். இந்த முடிவு இப்போது உங்களுக்கு சரியாக தோன்றலாம். ஆனால், சில நாட்களுக்கு பிறகு உங்களின் மன நிலையை பாதிக்கலாம். மேலும், உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும், எனவே மாறாக நீங்கள் மன்னிக்க அல்லது பிரிந்து விட முயற்சி செய்யுங்கள்.
நம்பிக்கையான நபருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:
முதலில் உங்கள் துணை கள்ள உறவில் இருப்பது தெரிந்து விட்டால், அதனை பற்றி உங்களுக்கு நம்பிக்கையான நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையை எப்படி, சமாளிப்பது என்பது பற்றி அவர்களிடம் ஆலோசனை பெறவும். இது உங்கள் உறவை மீண்டும் புதுப்பித்து கொள்ள உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உடலுறவில் உங்கள் துணைக்கு திருப்தி இல்லனா..? இப்படித்தான் இருப்பார்களாம்..!
வாய் விட்டு அழுகுங்கள்:
இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வந்தவுடன் உங்கள் இதயமும், நம்பிக்கையும் உடைந்து போய் விடும். இது போன்ற சூழ்நிலையை கையாளுவதற்கு, வாய் விட்டு அழுது விடுங்கள். இவை மன நிலையை கட்டுப்படுத்த உதவும். இல்லையெனில், பல்வேறு சிக்கலுக்கு வழி வகை செய்யும். இதனால், உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் பாதிப்பு இருக்கும்.
படுக்கையில் அந்த விஷயத்தில் இருமடங்கு இன்பம் பெற..உங்கள் துணையின் காதில் சொல்ல வேண்டியவை..!!