மழைக்காலம் வந்துவிட்டாலே, சளி, மூக்கடைப்பு, ஒற்றை தலைவலி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, உணவு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்.
மூக்கடைப்புக்கு பிரச்சனை இருந்தால், நெல்லிச்சாற்றில் 1 டீஸ்புன் மிளகுத்தூள், 1 டீஸ்புன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்:
ருசியான சுவை தவிர மழைக்காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பழங்கள், கீரை வைட்டமின் டி நிறைந்த முட்டை, பால் போன்றவை சாப்பிடலாம்.
மழைக்காலத்தில் அதிக ஊட்டச்சத்து நிறைந்த நட்ஸ் சாப்பிடலாம்.
சளி, மூக்கடைப்புக்கு துளசி டீ, இஞ்சி டீ போன்றவை பருகலாம். ஒற்றை தலைவலிக்கு துளசி இலை, லவங்கத்தை, சுக்கு, அரைத்து நெற்றில் பற்று போட வேண்டும்.
நெஞ்சுச்சளிக்கு தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சுட வைத்து, நெஞ்சில் தடவ வேண்டும்.
உணவில், தினமும் இஞ்சி, மிளகு, எலுமிச்சை போன்றவை சேர்த்துக் கொள்ளவும். தொண்டை கரகரபுக்கு சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்துபொடி செய்து தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
உங்கள் உடலை எப்போதும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வது அவசியம். தினமும் தண்ணீர் கொதிக்க வைத்து குடியுங்கள்.
தவிர்க்க வேண்டியவை:
கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் வறுக்கப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட பல்வேறு துரித உணவுகளை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும்.
மழைக் காலத்தில் தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.
குளிர்காலத்தில் அதிக இனிப்பு நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியைத் வெகுவாக பாதிக்கும்.
பச்சை காய்கறிகள் செரிமானம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் குளிர் பானங்கள், சோடாக்கள் மற்றும் மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.
மழைக் காலத்தில் நண்டு சாப்பிடுவது நல்லதா..?
இந்த நேரங்களில் இறால், நண்டு, மீன் போன்றவை எடுத்துக் கொள்ளலாமா? என்ற குழப்பம் இருக்கும். நண்டு இறைச்சியில் நிறைந்துள்ள பாஸ்பரஸ், ஒமேகா 3, துத்தநாகம், புரதம் போன்றவை பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. கொழுப்பை குறைக்க உதவும். மேலும், உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே, ருசியான சுவை தவிர மழைக்காலத்தில் நண்டு சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.