7 to 9 Months Pregnant: இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு ஒருவரின் வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு பெண் தாய்மை அடைவதற்கு சரியான வயது 21 முதல் 35 வரை ஆகும். இதற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள முயலும் போது, கருமுட்டை வளர்ச்சி குறைவு, கரு சிதைவு, குறை பிரசவம் போன்றவை ஏற்படும்.
பிரசவகாலம் நெருங்கும் நேரம் வரும் கடைசி மூன்று மாதம், கர்ப்பிணி பெண்ணுக்கு மிகவும் எதிர்பார்ப்புகளை கொண்ட காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில் உடல் மாற்றங்களும், மன நல மாற்றங்களும் உங்களை அசதியாக்க கூடும். கடந்து சென்ற 3 மாதங்களின் அறிகுறிகள் தொடரும். முடிவில் குழந்தையின் வரவு இருக்கும்.
தாயின் அறிகுறிகள்:
இந்த காலகட்டத்தில் மூச்சு திணறல், நெஞ்சு எரிச்சல் மற்றும் தூங்கும் போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
மார்பகங்கள் பெரிதாகி வலி இருக்கலாம். கொலஸ்ட்ரால் எனும் திரவம் கசியக் கூடும்.
சிசுவின் தலை கருப்பையின் அடிப்பகுதியில் பொருந்தும். சில வினாடிகள் மட்டுமே நீடிக்கும் கருப்பையின் இறுக்கம், சுருக்கங்கள் வலி, பிரசவ நேரம் நெருங்கும் போது உணரப்படும்.
குழந்தையின் முன்னேற்றங்கள்:
பல்வேறு உறுப்புகளின் எடை அதிகரிக்கும். குழந்தை கண்களை சிமிட்டும்.
36 வாரத்திற்கு சிசுவின் தலை, இடுப்பு பகுதியில் இறங்கி பிரசவத்திற்கு தயாராகிறது.
குழந்தையின் அளவு- தோராயமாக 20 அங்குலம்.
சிசுவின் எடை – சுமார் 3200-3400 கிராம் வரை இருக்கும்.
நீங்கள் செய்ய வேண்டியவை:
நல்ல சமச்சீரான சத்தான உணவை தொடர்ந்து சாப்பிடுங்கள். சிறிய அளவு உணவை அடிக்கடி சாப்பிடுங்கள். மிதமான உடற்பயிற்சியை தொடரவும்.
உங்கள் இடது பக்கத்தில் சாய்ந்து, படுத்து ஓய்வு எடுங்கள். நீண்ட தூரம் பயணங்களை தொடரவும். நீங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை பெட்டியில் வைக்கவும்.
உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு வீட்டிலோ அல்லது மருத்துமனையிலோ அணிய ஆடைகளை எடுத்து வையுங்கள்.
தனிமையில் இனிமையான இசையை கேளுங்கள். நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு நெருக்கமான நபர்கள், மருத்துவர் அல்லது ஆம்புலன்ஸ் சேவை ஆகியவர்களின் தொலைபேசி எண்களின் பட்டியலை தயார் செய்யுங்கள். அதனை எப்போதும் உங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு முதல் குழந்தை இருந்தால், பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தை பற்றிய தகவலை அந்த குழந்தைக்கு தெரியப்படுத்துங்கள்.