இந்த உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் செக்ஸ் உணர்வு என்பது இருக்கும். ஆனால், பெரும்பாலானோர் அதனை வெளிப்படுத்த முடியாமல் கட்டுப்படுத்தி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இன்னும், சிலர் பாலியல் வன்புணர்வு போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இயற்கை அமைப்பில் செக்ஸ் உணர்வு ஏற்படுவது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால், அதனை ஆரோக்கியமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் செக்ஸ் டாய்ஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா..? இந்தியாவில் இதன் பயன்பாடு குறைவு என்றாலும், ஏராளமானோர் இதனை பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், இதனை எப்படி கடைக்கு சென்று வாங்குவது, தன்னுடைய ஆசைகளை எப்படி பிறரிடம் கூறுவது என்று தெரியாமல்.? தயக்கம் கொள்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், நம்முடைய சமூகம் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது கிடையாது. எனவே, செக்ஸ் டாய்ஸ் யாருக்கு அவசியம், இதன் பயன்பாடு என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
செக்ஸ் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் உணர்ச்சிகள் அதிகரித்து, மிகவும் எளிதில் உச்சக்கட்ட நிலையை அடைகிறார்கள். அதுமட்டுமின்றி, பாலியல் வன்புணர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த செக்ஸ் டாய்ஸ் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாகும்.
திருமணம் ஆகாத பதின்ம வயது வாலிபர்கள் தங்கள் ஆசைகளை செக்ஸ் டாய்ஸ் மூலம் தீர்த்துக் கொள்ள முடிகிறது. திருமணத்திற்கு பிறகு கள்ள உறவு பல்வேறு காரணங்களுக்காக ஏற்படுகிறது. அதில் குறிப்பிட்டு, தன்னுடைய கணவர் அல்லது மனைவியால் தன்னை திருப்திப்படுத்த முடியாமல் போகுதல் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. இதனால் குடும்பத்தில் பிளவு ஏற்படுகிறது.
எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு செக்ஸ் டாய்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
செக்ஸ் டாய்ஸ் என்பது, தன்னுடைய உணர்வுகளை அடக்கி வைக்காமல் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக செயல்படுகிறது. இந்த கருவியை நீங்கள் தனிமையில் மட்டுமின்றி, மனைவியுடன் சேர்ந்தும் பயன்படுத்தலாம்.
பெண்களுக்கு வஜைனாவில் ஏற்படும் வலியை போக்கவும் செக்ஸ் டாய்ஸ் உதவுகிறது. இதனால் கணவன் – மனைவி இருவரும் உறவில் எந்தவிதமான இடையூறுகளும் இன்றி இன்பத்தை அனுபவிக்கலாம்.
ஆண்களும் சரி, பெண்களும் சரி சுய இன்ப பழக்கத்தை மேற்கொள்கிறார்கள். இதனால், சில நேரம் பல்வேறு தொற்றுகளுக்கு வழிவகுக்கும். செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவது, சுய இன்பம் பழக்கத்தை விட இருபாலருக்கும் உச்சகட்ட இன்பத்தை தருகிறது.
பெண்களுக்கான செக்ஸ் டாய்ஸ்:
பெண்ணுறுப்புகளுக்காவே தயாரிக்கப்பட்ட இந்த செக்ஸ் டாய்ஸ் கையடக்கம் முதல் கை நீளம் வரை பல வகைகளில் கிடைக்கிறது. இவை பார்ப்பதற்கு முட்டை அல்லது பாகற்காய் வடிவில் இருக்கும். இவை பெண்ணுறுப்பில் ஜி-ஸ்பாட் எனப்படும் பகுதியை உட்புறமாக உச்சமடைய செய்யும்.
ஆண்களுக்கான செக்ஸ் டாய்ஸ்:
ஆண்களுக்காக தயாரிக்கப்பட்ட செக்ஸ் ரிங் சிறிய வளைய வடிவில் இருக்கும். இவை பெரும்பாலும் ஆணுறுப்பில் பயன்படுத்தப்படுபவை. இதனை ஆணுறுப்பில் பொருத்தும் போது அதன் வேகத்திற்கு ஏற்ப கிளர்ச்சி என்பது ஏற்படும்.
மூன்றாவது வகையான ஸக்ஷன் எனப்படும் செக்ஸ் டாய்ஸ் ஆண் – பெண் ஆகிய இருபாலரும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இப்போது, நீங்கள் செக்ஸ் டாய்ஸ் வாங்க தயார் என்றால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில், ஒரு சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.