Gooseberry juice: அழகை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்காக நாம் விளம்பரங்களில் காட்டும் விதவிதமான கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் உங்கள் காசுதான் செலவு ஆகுமே தவிர, நீங்கள் நினைத்த மாறி ரிசல்ட் என்பது எளிதில் கிடைக்காது. இவற்றை தவிர்த்து, தோலுக்கு எந்த விதமான சேதங்களுக்கு, சுருக்கங்களும் ஏற்படாத மாதிரி இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதமான மூலிகை மருந்துகளை பயன்படுத்தி பார்த்தால், உங்களின் முகம் தேவதை மாதிரி ஜொலிக்கும்.
அப்படியான, ஒரு பொருளாக நெல்லிக்காய் இருக்கிறது. நெல்லிக்காயில் இருக்கும், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் முகத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. அவை என்னென்னெ நன்மைகள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
டிப்ஸ் 1:
தேனுடன் நெல்லிக்காய் சாறு கலந்து முகத்தில் தடவினால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், மருக்கள் மறையும். அத்துடன் முகம் அதிக பொலிவுடன் காணப்படும்.
டிப்ஸ் 2:
நெல்லிக்காய் சாறுடன், ஆலிவ் எண்ணெய் 2;1 என்ற வீதத்தில் கலந்து தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி, செய்தால் போதும் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி முகம் அதிக பொலிவுடன் காணப்படும்.
டிப்ஸ் 3:
நெல்லிக்காய் சாறுடன் வாழைப்பழத்தை மசித்து தடவினால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி, சுருக்கங்கள் மறையும். இந்த பேஸ்டை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி பார்த்தால் போதும். முகத்தில் புதிய ஒளி பிறக்கும்.