நீரழிவு நோய் என்பது 40 வயதை கடந்த நம் அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக மாறியுள்ளது. இதற்கு நம்முடைய மேற்கத்திய உணவு பழக்கவழக்கம், வாழ்கை முறை மாற்றம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்றைய இன்டர்நெட் காலத்தில், நீரழிவு நோயாளிகள் தங்கள் உணவு பழக்கங்களை பலவற்றில் படித்து அறிந்து கொள்கிறார்கள். இருப்பினும், அவற்றில் எவற்றை சாப்பிடுவது, எதனை தவிர்ப்பது என்கின்ற குழப்பம் இருக்கும். ஏனெனில். உண்ணும் உணவில் கவன குறைவாக இருந்தால், ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவினை அதிகரிக்க செய்யும். இது அளவிற்கு அதிகமாக இருப்பின், சில நேரம் உயிருக்கு கூட ஆபத்தாக முடியும். அந்த பட்டியலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு நீரழிவு நோயாளிகளுக்கு உகந்ததா..? என்கின்ற குழப்பம் மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. குளிர்காலத்தில், இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு அதிகம் பயிரிடப்படுகிறது.
மேலும் படிக்க….கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதம்: அதாவது 7 முதல் -9 வது மாதம் வரை..!
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்கள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ அதிக அளவு நிறைந்துள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்குகிறது. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுகிறார்கள். சர்க்கரை வள்ளிக்கிழக்கு, இதன் இனிப்பு சுவை கருதி நீரழிவு நோயாளிகள் விரும்பி உண்ணுகிறார்கள். இது குறித்து சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன விளக்குகிறது என்பதை பார்ப்போம்.
மேலும் படிக்க….கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதம்: அதாவது 7 முதல் -9 வது மாதம் வரை..!
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால், நீரழிவு நோயாளிகள் இதனை சாப்பிட பயம் கொள்கிறார்கள். உண்மையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் அதிக நார்ச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மாறாக, இதனை தோலுடன் சேர்த்து நன்றாக வேக வைத்து சாப்பிட்டால், நீரழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். மேலும், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்த உதவும்.
மேலும் படிக்க….கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதம்: அதாவது 7 முதல் -9 வது மாதம் வரை..!