இன்றைய காலகட்டத்தில் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகள் குறைவு ஆகும். கிராமப்புறங்களிலும், ஃப்ரிட்ஜ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக ஃப்ரிட்ஜ் இருக்கிறது. நமக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்கி ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சில பொருட்களை ப்ரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துவது உடலுக்கு பல்வேறு தீங்கு விளைவிக்கும் அவை என்னென்னெ பொருட்கள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
தக்காளி:
தக்காளி ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்பது, அதில் உள்ள நீரினை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் சுவையில் இழப்பு ஏற்படும். அத்துடன், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
வெங்காயம்:
வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்பதை, முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதில் இருக்கும் ஈரப்பதம் நமக்கு பூஞ்சை தொற்றினை ஏற்படுத்தும். அதேபோன்று, வெங்காயத்தை உருளைக்கிழங்கிற்கு அருகில் வைக்காமல் இருப்பது நல்லது.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜினுள் வைப்பதன் மூலம் அதன் தோல் கருப்பாக மாறுவது மட்டுமின்றி, வெகு விரைவில் பழுத்து போகவும் செய்கிறது. எனவே, வாழைப்பழம் பொதுவாக வெளியில் வைத்து பயன்படுத்துவது நல்லது.
அத்துடன், அதனை கயிற்றில் கட்டி தனியாக மேலே தொங்க விட்டால் போதும், நீண்ட நாட்களில் கெட்டு போகாமல் இருக்கும். இதனை தவிர்த்து, ஆப்பிள், வெள்ளரி, தர்பூசணி , கிர்ணி பழம் போன்ற நீர்சத்து நிறைந்த பழங்களை வைக்காமல் இருப்பது நல்லது.
காபி தூள்:
காபி கொட்டை இயற்கையில் அதிக மணம் சுவை கொண்டது. எனவே, இதனை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதால், இதன் உண்மையான சுவை மற்றும் மணம் நீங்கிவிடும். எனவே, காப்பி தூள் போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
சப்பாத்தி மாவு:
சப்பாத்தி மாவு பிசைந்து நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது உடலுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
பருப்பு குழம்பு:
பருப்பு குழம்பு, கீரை கூட்டு போன்றவற்றை ஃபிரிட்ஜில் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில், இவை உங்களுக்கு எளிதில் வாயுத்தொல்லை ஏற்படுத்தும்.
தேன்:
தேனை நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது, அதன் சுவை மற்றும் மருத்துவ குணங்கள் குறையும். எனவே, தேனை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
காளான்:
காளானை ஒரு வாரத்திற்கு மேல் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க….கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதம்: அதாவது 7 முதல் -9 வது மாதம் வரை..!