Beauty tips for face: இன்றைய பிஸியான காலத்தில் இயற்கை முறையில் தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கு, பலருக்கும் ஆசை இருந்தாலும் அதற்கான கூடுதல் நேரம் செலவிடுவதற்கு யாரும் தயாராக இல்லை. எனவே, இன்ஸ்டன்ட் பியூட்டி பெறுவதற்கு அழகு நிலையம் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். எவ்வளவுதான் அதிக செலவு செய்து விலை உயர்ந்த கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி நாம் பயன்படுத்தி பார்த்தாலும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நம்முடைய தோற்றம் வயதானது போல் மாறிவிடும்.
இன்னும் சிலருக்கு பல்வேறு, உடல் உபாதைகள், தோல் சார்ந்த பிரச்சனைகள் வந்து விடும். எனவே, நாம் பார்லர் செல்லாமல் இயற்கை முறையில் அழகை பெறுவதற்கு, இன்ஸ்டன்ட் ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். பார்ட்டி, பண்டிகை போன்ற நாட்களில் இதை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்த்தால், அடுத்த 24 மணி நேரத்தில், நிச்சயம் உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்.
இதற்கு முதலில், நீங்கள் கடைக்கு சென்று வெண்ணிற பாலில் இருந்து கிடைக்கும் பிரஷ் கிரீம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு காலியான பவுலை எடுத்து அதனுடன், தேன் மற்றும் பாதம் பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும், ஒன்றாக கலந்து நன்றாக பேஸ்ட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இவை, உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெற உதவுகிறது.
உங்கள் முகத்தை கழுவி சுத்தமான காட்டன் துணியை வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு, உங்கள் முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்னர், முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள். இது உங்கள் முகத்திற்கு இன்ஸ்டன்ட் வெண்மையான நிறம் பெறுவதற்கு, பளபளப்பான சருமம் கிடைப்பதற்கு உதவியாக இருக்கும்.
இதனை தவிர்த்து, இன்ஸ்டன்ட் பியூட்டி பெறுவதற்கு ஒரு காலியான பவுலில் கற்றாழை ஜெல், அதனுடன் பால் 2 டீஸ்புன் மற்றும் கடலை மாவு 1 டீஸ்புன் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முகத்தை கழுவி துடைத்து எடுத்து, இந்த பேஸ் பேக்கை அப்ளை பண்ணி கொள்ளுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.