Sharing is caring!

Useful kitchen tips: சமையல் அறையானது நம்முடைய வீட்டில் நாம் அதிகம் பயன்படுத்தும் இடமாகும். இல்லத்தரசிகளின் கோவில் என்று அழைக்கப்படும் சமையல் அறையானது, சத்தான உணவுகளை சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்கை வாழ்வதற்கு வழி வகை செய்கிறது. ஆம், காலையில் காபி போடும் போது துவங்கும் குடும்ப தலைவிகளுக்கு பயணம் இரவு தூங்க செல்லும் வரை நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், இன்றைய பிஸியான வாழ்கை முறையில், ரொம்பவும் சிரமம் இல்லாமல் சமையல் அறையினை எளிமையான முறையில் கையாள்வதற்கு தேவையான சின்ன சின்ன சமையல் குறிப்புகளை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப்போகிறோம்.

மேலும் படிக்க….வீட்டில் உலா வரும் கரப்பான் பூச்சி, பல்லி நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க ..இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்கள்..!!

டிப்ஸ் 1 :

தயிர் சீக்கிரம் புளிக்காமல் இருக்க, அதில் நறுக்கிய இஞ்சி, தேங்காய் துண்டு போன்றவற்றை போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

டிப்ஸ் 2;

வெங்காயம் உரிக்கும் போதும், நறுக்கும் போதும் கண்களில் கண்ணீர் வருவது இயல்பான ஒன்றாகும். எனவே, இனிமேல் கத்தியை சூடு செய்துவிட்டு அதில், வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராமல் இருக்கும்.

அதேபோல், தண்ணீரில் ஊற வைத்து வெங்காயத்தை நறுக்கினால் வெங்காய தோல் அனைத்து இடங்களிலும் பரவாமலும், எளிதில் கண்களில் கண்ணீர் வராமலும் இருக்கும்.

டிப்ஸ் 3:

நாம் சில நேரம் பால் காய்ச்சும் போது தீய்ந்த வாடை வந்தால், ஒரு வெற்றிலையை போட்டு வைத்தால் கருகிய வாடை வராமல் இருக்கும்.

டிப்ஸ் 4:

நீங்கள் சமைக்கும் போது உணவில் மறந்து போய் உப்பு அதிகமாக போட்டு விட்டீர்கள் என்றால், எலுமிச்சை சாறை பிழிந்து விடலாம். அதேபோன்று, மற்றொருமொரு வழியாக ஒரு துண்டு வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும்.

டிப்ஸ் 5:

பால் காய்ச்சும் போது சில நேரம் பால் பொங்கி அடிப்பிடித்து விடுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி, பால் பொங்கி வழிவது குறைப்பதற்கு, பால் காய்ச்சும் பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு பாலை உடைத்து ஊற்றினால் போதும், பால் பொங்கி வழியாமல் இருக்கும்.

டிப்ஸ் 6:

மழைக்காலங்களில் பாய்களில் பூஞ்சை தொற்று பிடித்து விடும், பாயை துவைத்து காய வைப்பதும் மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே, இனிமேல் நீங்கள் பாயை சுருட்டி வைக்கும் போது இடையில் நியூஸ் பேப்பர் விரித்து சுருட்டி வைத்தால், பூஞ்சை பிடிக்கவே பிடிக்காது. ஈரத்தை நியூஸ் பேப்பர் உறிந்து கொள்ளும்.

மேலும் படிக்க….வீட்டில் உலா வரும் கரப்பான் பூச்சி, பல்லி நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க ..இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்கள்..!!

டிப்ஸ் 7:

வடித்த சாதம் மீந்து போய் விட்டால், அதில் சில மணி நேரங்களில் சூடு குறைந்து போய் விடும். இதனால் நாம் சாப்பிடுவது மிகவும் கடினமாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில், இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேலே ஒரே ஒரு இட்லி தட்டை வைத்து, அதில் மீந்து போன சாதத்தை வைத்து சூடு பண்ணலாம். ஐந்து நிமிடம் கழித்து இப்போது எடுத்து பரிமாறலாம்.

டிப்ஸ் 8:

அரிசி, பருப்புகளில் வண்டு பூச்சிகள் வராமல் இருக்க பிரியாணி இழை, காய்ந்த மிளகாய் போட்டு வைக்கவும். அதேபோன்று, ஈரமில்லாத டப்பாவில் போட்டு டைட்டாக பூட்டி வைக்கவும்.

மேலும் படிக்க….வீட்டில் உலா வரும் கரப்பான் பூச்சி, பல்லி நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க ..இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்கள்..!!

(Visited 24 times, 1 visits today)

Sharing is caring!