Weight Loss Drinks: உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை நம்மில் பலரும் எதிர்கொண்டு வருகிறோம். உடல் எடையை குறைக்க பலரும் ஜிம்மில் பலமணி நேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். என்னதான் கடுமையான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும், உடல் எடையை குறைக்க சத்தான உணவு முறைகளை எடுத்துக் கொள்வது அவசியம். எனவே, உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஆரோக்கியமான பானங்கள் குடிப்பது உதவியாக இருக்கும். இது உடலில் உள்ள அசுத்தங்களை நீக்கி குடலை சுத்தப்படுத்த முடியும். மேலும், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
எலுமிச்சை சாறுடன், வெல்லம்:
முதலாவது எலுமிச்சை சாறுடன், வெல்லம் சேர்த்து பருகுவது உடல் எடையை குறைத்து, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வெல்லத்தை சிறிதளவு பாத்திரத்தில் எடுத்து கொதிக்க வைக்கவும். பின்னர், அந்த தண்ணீரை வடிகட்டி எலுமிச்சை தேநீர் ஒரு டீஸ்புன் சேர்த்து கலந்து குடிக்கவும்.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் C, செரிமானம் தொடர்பான பிரச்சனை தீரும். நீண்ட நேரம் உங்களுக்கு பசி எடுக்காது. குடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க முடியும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
வெஜிடபிள் ஜூஸ்:
வெஜிடபிள் ஜூஸ் குடிப்பது கெட்ட கொழுப்பை கரைத்து , உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். இதில் இருக்கும் வைட்டமின், மினரல் உங்களை ஃபிட்டாக வைக்கும்.
தேங்காய் தண்ணீர்:
தேங்காய் தண்ணீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. உடற்பயிற்சிக்கு பிறகு, இந்த ஆரோக்கியமான பானம் நீங்கள் குடிக்கலாம். இது உங்கள் உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்கும்.
ஆப்பிள் சைடர் வினிகர்:
ஆப்பிள் சைடர் வினிகர் உடலின் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. 2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் சேர்த்து பருக வேண்டும். இது உங்கள் உடலில் கெட்ட கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கும்.
கீரின் டீ:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கீரின் டீ குடிப்பது சிறந்த ஒன்றாகும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி, உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. எனவே, காலை, மாலை இரண்டு வேளை கீரின் டீ குடிக்கலாம்.
தண்ணீர்:
இதனை தவிர்த்து உடலை எப்போதும் நீரோட்டமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு நாள் ஒன்றுக்கும் 5 முதல் 6 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது பசியை கட்டுக்குள் வைப்பதுடன் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.