Aadi Amavasai 2023: ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணைகின்றனர். இந்த நாளில் சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும். ஜூலை 17- ம் தேதி ஆடி மாதம் ஆரம்பமாகிறது. அதுவும் அமாவாசை நாளில் துவங்குவதால் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டின் ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது. இந்த ஆண்டின் ஆடி 1-ஆம் தேதி வரும் அமாவாசை கடக ராசி புனர்பூச நட்சத்திரத்தில் வருகிறது. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், இது மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது ஆடி அமாவாசை வருகிற ஆடி 31ம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திலும் வருகிறது.
Sukran Peyarchi 2023: சுக்கிரன் இடப்பெயர்ச்சி… ஜூலை 7ம் தேதி வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன்..!
இந்நாளில் சந்திரன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். அதே நேரத்தில் தட்சணிய யோகம் துவங்குவதால் இதன் பலன் ஒவ்வொரு ராசியிலும் இருந்தாலும், குறிப்பாக துலாம், மிதுனம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குபேர யோகம் துவங்க இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆடி மாதத்தில், தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்:
இந்த ராசிகளுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். திருமண காரியம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வீடு, சொத்து வாங்கும் யோகம் பிறக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை கூடும்.
மகரம்:
மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த ஆடி மாதத்தில் வளம் செழித்து வாழ்வு பெருகப் போகிறது. தொட்டது துலங்கும், விட்டது விலகும் யோகம் உண்டாகும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் மரியாதை இருக்கும், கடன் பிரச்சனை நீங்கும்.
மீனம்:
மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த நேரத்தில் உங்களின் காதல் கைகூடும். திருமண வாழ்கை மகிழ்ச்சியை தரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். தொட்டது துலங்கும்,. வெற்றி கிடைக்கும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும்.